

ரூ.5 லட்சம் மதிப்பில் 10,000 முகக் கவசங்களை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் அங்கத்தினர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ரோட்டரி கிளப் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''நமது நாடு கோவிட் வைரஸால் 2020ஆம் ஆண்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்கள், பள்ளிக்கூடத்திற்குச் செல்ல முடியாத அளவிற்கு நமது சராசரி வாழ்க்கையை இது பாதித்துள்ளது.
எனினும் தமிழக அரசின் நேர்கொண்ட பார்வையாலும் தமிழக மக்களின் ஒத்துழைப்பால், இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி, இந்த மாதம் முதல் பள்ளிகள் தொடங்கலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. பள்ளிக்கும் தேர்வு எழுதவும் சின்னஞ் சிறிய மாணவர்கள் செல்கிறார்கள் எனும்போதே, நமக்கு முதலில் வரக்கூடிய கவலை அவர்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும்தான்.
இதை முன்னிலையாக வைத்து, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் அங்கத்தினர் அனைவரும் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கு, முகக்கவசத்தை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்திருக்கிறோம். இதன் பலனாக இன்று ரூ.5 லட்சம் மதிப்பிற்கு 10,000 முகக் கவசங்கள் எங்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில் இதை வழங்குகிறோம். இது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்று சொல்வதைவிட, மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுக்கக் கூடிய விஷயம் என்பதுதான் முக்கியம்.
இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கல்வித்துறைஅதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்''.
இவ்வாறு ரோட்டரி கிளப் தெரிவித்துள்ளது.