பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவை வருகை: எல்.முருகன் தகவல்

பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவை வருகை: எல்.முருகன் தகவல்
Updated on
1 min read

பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. கொங்கு மண்டலத்தில் 12 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பாஜக- அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். அனைத்து மாவட்ட மக்களிடம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருப்பார்கள்.

கோவையில் வரும் 25-ம் தேதி நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வரும் 21-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்" என்று எல்.முருகன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in