காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு நிதி நிறுவனம் குறித்துப் புகார் கொடுக்க வந்த பெண்கள்.
காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு நிதி நிறுவனம் குறித்துப் புகார் கொடுக்க வந்த பெண்கள்.

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி: காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார்

Published on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் குறித்து டிஎஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்தனர்.

மதுரையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் 5 ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக அறிவிப்பு செய்தது. இதை நம்பி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேமம், குன்றக்குடி, ஆர்காடு, மஞ்சினிப்பட்டி, நெய்வாசல், பழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாதந்தோறும் ரூ.500 முதல் ஆயிரம் வரை செலுத்தி வந்துள்ளனர். பணம் செலுத்தியவர்களுக்கு அதற்கான உறுதிப் பத்திரம் கொடுத்துள்ளனர்.

ஆனால், முதிர்வு அடைந்தும், சொன்னபடி முதிர்வுத் தொகையைக் கொடுக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சென்றபோது, அலுவலகம் மூடிக் கிடந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் குறித்துக் காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர்களிடம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in