தேக்கம்பட்டி நல்வாழ்வு முகாமிற்கு புறப்பட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி

தேக்கம்பட்டி நல்வாழ்வு முகாமிற்கு புறப்பட்ட பழநி கோயில் யானை கஸ்தூரி
Updated on
1 min read

பழநி கோயில் யானை கஸ்தூரி நேற்று நல்வாழ்வு முகாமில் பங்கேற்க தேக்கம்பட்டி புறப்பட்டுச்சென்றது.

யானையுடன் பாகன்கள், கால்நடை மருத்துவக்குழுவினர் உடன் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு சொந்தமான யானை கஸ்தூரி, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் நல்வாழ்வு முகாமில் பங்கேற்க நேற்று பழநியில் இருந்து புறப்பட்டுச்சென்றது.

யானைகள் நல்வாழ்வு முகாமில் பங்கேற்க 14 வது முறையாக செல்லும் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லாரியில் ஏற்றப்பட்டு தேக்கம்பட்டிக்கு அழைத்துச்செல்லப்பட்டது.

யானையுடன் பராமரிப்பிற்காக யானையின் பாகன்கள், கால்நடைமருத்துவர்கள் உடன் சென்றனர். முன்னதாக யானைக்கும், உன் செல்பவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கால்நடைமருத்துவர்கள் கூறுகையில், 48 நாட்கள் நடைபெறும் முகாமில் பங்கேற்க செல்லும் கஸ்தூரி யானைக்கு முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குடற்புழு மருந்து கொடுக்கப்பட்டது. நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. மேலும் புத்துணர்வு பெறுவதற்காக முகாமிற்கு அழைத்துச்செல்லப்படுகிறது, என்றனர்.

முகாமிற்கு வழியனுப்பும் நிகழச்சியில் கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், கால்நடை உதவிஇயக்குனர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in