தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அஞ்சலி
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக.சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, நகர பொறுப்பாளர் முரளி, ஒன்றிய பொறுப்பாளர் எல் எம் பாண்டி, போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடமலைக்குண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கடமலை-மயிலை தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊராட்சி செயலாளர் தென்னரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, உமாமகேஸ்வரி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குறிஞ்சிமாடசாமி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
