

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுப் பரிந்துரையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசுப் பரிந்துரையில், அலெக்ஸி நவால்னி, கிரெட்டா துன்பெர்க் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அலெக்ஸி நவால்னி, ரஷ்யாவில் புதின் ஆட்சிக்கும் எதிராக, அந்நாட்டின் சமூக நலன் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். கிரெட்டா துன்பெர்க், காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து உலகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
2020-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.