

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அவர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
''சமீப காலங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டத்திற்காக 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க நிதி ஊக்கத்தை வழங்கும்.
2019ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையின்போது, ஒரு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (என்ஆர்எஃப்) தொடங்குவது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. என்ஆர்எஃப் செலவினம் ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 கோடியாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த ஆராய்ச்சிக்கான சூழல் வலுப்பெறுவதை இது உறுதி செய்யும்.
புதிய முயற்சியாக தேசிய மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.