

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் விபத்து எதுவும் இல்லை ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இந்த நிலடுக்கம் இன்று அதிகாலை 12.41 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ருச்சேஷ் ஜெயவன்ஷி பிடிஐயிடம் கூறியதாவது:
''ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.41 மணியளவில் அவுரங்காபாத்திலிருந்து 230 கி.மீ. தொலைவில் வாஸ்மத் தாலுக்காவைச் சேர்ந்த பாங்க்ரா ஷிண்டே கிராமத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தில் தீவிரம் அதிகம் இல்லை. எனினும் முன்னதாக, கிராமத்தில் சில நில அதிர்வு ஒலிகள் கேட்டன. ஆனால், அப்பகுதியில் எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ எந்த ஒரு தகவலும் வரவில்லை.
லாத்தூரில் நில அதிர்வு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூகம்பத்திற்கான குறைந்த சேத ஆபத்து மண்டலம் என்பதைக் குறிப்பிடும் ஹிங்கோலி மண்டலம் -2ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
1993-ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தில் 10,000 பேர் பலியான கில்லாரியில் (லாதூர் மாவட்டம்) இருந்து 240 கி.மீ. தொலைவில் பாங்க்ரா ஷிண்டே கிராமம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.