

மெக்சிகோவில் கடந்த சில மாதங்களாகவே கரோனா பலி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மெக்சிகோவில் 1,506 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 1,55,145 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 18,670 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவினால் பலி எண்ணிக்கை அதிகரித்த நாடுகளில் மெக்சிகோ இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளன.
இந்த நிலையில் கரோனாவினால் ஏற்பட்ட வலி மிகப்பெரியது என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.