சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி

‘இந்து தமிழ் திசை’ - கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கும் நிகழ்வு
சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ உடன் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி, சென்னை தி.நகர் வாணி மஹாலில் மே 24-ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு, ஐஏஎஸ். தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மேனாள் ஆலோசகர் வெ.திருப்புகழ், ஐஏஎஸ். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிகழ்வு ஒருங்கிணைப்பு & விற்பனை பிரிவு உதவிப் பொதுமேலாளர் மு.முருகேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய பூமிநாதன் ஆகியோர் ஊக்கவுரையாற்ற உள்ளனர்.

<div class="paragraphs"><p>இறையன்பு,&nbsp;வெ.திருப்புகழ்</p></div>

இறையன்பு, வெ.திருப்புகழ்

இந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்டக் கையேடு இலவசமாக வழங்கப்படும். மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.

சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in