

சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களில் ஒன்றான ரீகல் ஜூவல்லர்ஸ், சென்னை தியாகராய நகரில் தனது முதல் ஷோரூமைத் தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரபல நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்ரன் விளம்பர தூது வராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தனது ஷோரூமைத் தொடங்கவுள்ள ரீகல் ஜுவல்லர்ஸ். தமிழகம் முழுவதும் பல ஷோரூம்களை அமைக்கும் நீண்டகாலத் திட் டத்தின் ஒரு பகுதியாக இந்த விரிவாக்கத்தை மேற்கொள்கிறது.
48 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் ரீகல் ஜுவல்லர்ஸ், சிறந்த டிசைன்கள், தரமான நகைகள், வெளிப்படையான விலை நிர்ணயம், நம்பக மான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவில் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து ரீகல் ஜுவல் லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விபின் சிவதாஸ் கூறியதாவது: ஓர் உற்பத் தியாளர் மற்றும் மொத்த விற்பனையாளரிடமிருந்து நேரடி யாக நகைகளை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள் தரும் நடவடிக்கையாகும்” என்றார். இந்த புதிய வணிக முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி, நகை வாங் கும் அனுபவத்தை புதிய வகையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சில்லறை விற்பனை. வாடிக்கையாளர் சேவை, ஷோரூம் ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ். நிர்வாகம் மற்றும் பிற துணைப் பிரிவுகளில், வரும் ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உரு வாக்க ரீகல் ஜுவல்லர்ஸ் திட் டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாக இயக் குநர் பல்லவி நாம்தேவ் கூறும் போது. "தமிழகத்தில் எங்களு டைய பயணத்தைத் தொடங்கும் இந்தத் தருணத்தில், பெண் களுக்கு அதிகாரமளிக்கும். குடும்பங்களுக்கு ஆதரவளிக் கும். சமூகங்களை வலுப்படுத் தும் அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார். சேர்மன் சிவதாசன் தாமரசேரி கூறும்போது. “தமிழ்நாட்டு மக் களுடன் நீடித்த உறவுகளை உருவாக்க ஆவலுடன் இருக் கிறோம்" என்றார்.