‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மருத்துவத் துறை வளர்ச்சிக்கு உதவும் மருத்துவர்களை அங்கீகரிப்பது பெருமை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

மருத்துவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, பேராசிரியர் ரவி பட்​னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி  செயலாளர்  எஸ்.கவுரி சங்கர், ‘இந்து தமிழ் திசை’யின் விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

மருத்துவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, பேராசிரியர் ரவி பட்​னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் எஸ்.கவுரி சங்கர், ‘இந்து தமிழ் திசை’யின் விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
3 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில், மருத்​து​வப் பணியை சேவை மனப்​பான்​மையோடும், அர்ப்​பணிப்​போடும் செய்​து​வரும் மருத்​து​வர்​களைப் பாராட்டி கவுரவிக்​கும் வகை​யில் ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ எனும் சிறப்பு விருதுகள் கடந்த 4 ஆண்​டு​களாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதே​போல், 5-வது ஆண்​டாக ‘டெட்​டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தி​யா’ வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - மருத்​துவ நட்​சத்​திரம் 2025’ விருதுகள் வழங்​கும் விழா சென்னை மியூசிக் அகாட​மி​யில் நேற்று நடை​பெற்​றது. இந்​திய மருத்​துவ சங்​கம் - தமிழ்​நாடு (ஐஎம்​ஏ), ஜிஆர்டி ஜூவல்​லர்ஸ் இணைந்து நடத்​தின. பங்​கு​தா​ரர்​களாக கிரா​மாலயா தொண்டு நிறு​வனம் மற்​றும் லலி​தாம்​பிகை ஃபெர்​டிலிட்டி சென்​டர் ஆகியவை இருந்​தன.

விழா​வில், சிறப்பு விருந்​தின​ராக தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பங்​கேற்​றார். அவர், சென்​னை, செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, வேலூர், விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்சி ஆகிய 10 மாவட்​டங்​களை சேர்ந்த 77 மருத்​து​வர்​களுக்கு ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ விருது வழங்கி கவுர​வித்​தார்.

அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யனுக்​கு ரெக்​கிட் நிறு​வனத்​தின் தெற்கு ஆசி​யா, மெனார்ப் மற்​றும் ஆப்​பிரிக்​கா​வின் தகவல் தொடர்பு மற்​றும் நிறுவன விவ​காரங்​கள் துறை இயக்​குநர் பேராசிரியர் ரவி பட்​னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்​கடேஸ்​வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்​கினர்.

தொடர்ந்​து, இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் தமிழக தலை​வர் பி.செங்​குட்​டு​வன், செய​லா​ளர் எஸ்​.​கார்த்​திக் பிரபு, நிதி செய​லா​ளர் எஸ்​.க​வுரி சங்​கர், பேராசிரியர் ரவி பட்​னாகர், கிரா​மாலயா தொண்டு நிறு​வனத்​தின் அலு​வலர் இளங்​கோவன் ஆகியோ​ருக்​கும் நினைவு பரிசுகள் வழங்​கப்​பட்​டன.

இதையடுத்​து, மருத்​து​வர் கு.கணேசன் எழு​திய ‘இத​யம் போற்​று’ என்ற புத்​தகத்தை பேராசிரியர் ரவி பட்​னாகர் வெளி​யிட, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பெற்​றுக் கொண்​டார். முதல்​கட்​ட​மாக நடை​பெற்ற இவ்​விருது வழங்​கும் விழா, அடுத்து திருச்சி மற்​றும் கோவை மண்​டலங்​களி​லும் நடை​பெற உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

விழா​வில், அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசி​ய​தாவது: ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ எனும் பெயரில் இந்த விருதுகள் தொடர்ந்து வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. பொது​வாக, மருத்​து​வர்​களுக்​கான விருதுகள் மற்​றும் அங்​கீ​காரம் என்​பது கரோனா பேரிடருக்கு பின்​னர் தான் அதி​கரிக்​கத் தொடங்​கியது.

கரோனா காலத்​தில் தங்​கள் உயிரை​யும் துச்​சமென மதித்து மருத்​து​வர்​கள் ஆற்​றிய மகத்​தான பணி​யின் விளை​வாக, சமூகத்​தில் மருத்​து​வர்​கள் மீதான மதிப்பு உயர்ந்​துள்​ளது. அதற்​கேற்ப தமிழக அரசின் சார்​பிலும், மருத்​து​வர்​களுக்கு விருதுகள் வழங்​கப்பட வேண்​டும் என்ற கோரிக்​கையை ஏற்​று, கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்பு வரை வழங்​கப்​ப​டாத விருதுகள், தற்​போது ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

திமுக அரசு பொறுப்​பேற்ற பிறகு, இது​வரை 158 அரசு மருத்​து​வர்​களுக்கு விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. தமிழகத்​தில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட மக்​களை தேடி மருத்​து​வம் திட்​டம் தற்​போது, 2.50 கோடி பயனாளி​களை சென்​றடைந்​துள்​ளது. தமிழகத்​தில் உள்ள 2,200-க்​கும் மேற்​பட்ட மலை​வாழ் கிராமங்​களுக்கு மருத்​து​வர்​கள் நேரடி​யாகச் சென்று மருத்​து​வம் பார்க்​கின்​றனர்.

கீழ்ப்​பாக்​கம் மனநல காப்​பகத்​தில் ரூ.40 கோடி மற்​றும் ரூ.36 கோடி மதிப்​பீட்​டில் புதிய கட்​டிடங்​கள் கட்​டப்​பட்​டு, பெங்​களூரு​வில் உள்ள நிம்​ஹான்ஸ் நிறு​வனத்​துக்கு இணை​யாக ஆராய்ச்சி மைய​மாக மாற்​றப்​பட்டு வரு​கிறது. காஞ்​சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யில், மும்பை டாட்டா மெமோரியல் மருத்​து​வ​மனைக்கு இணை​யாக ரூ.324 கோடி​யில் மாபெரும் புற்​று​நோய் ஆராய்ச்சி மையம் கட்​டப்​பட்டு வரு​கிறது.

அண்​மை​யில், மத்​திய அரசின் சுற்​றுலாத் துறை வெளி​யிட்ட அறி​விப்​பின்​படி, இந்​தி​யா​விலேயே மருத்​துவ சுற்​றுலா​வுக்கு தமிழகத்​தில் தான் அதிக அளவி​லான வெளி​நாட்​டினர் வரு​கின்​றனர். அதாவது, 70-க்​கும் மேற்​பட்ட நாடு​களி​லிருந்து ஆண்​டு​தோறும் 15 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் மருத்​துவ சிகிச்​சைக்​காக தமிழகம் வரு​கின்​றனர்.

அதற்​கேற்ப, தனி​யார் மருத்​து​வ​மனை​களு​டன் இணைந்து குழந்​தைகளுக்​கான புற்​று​நோய் சிகிச்​சைக்கு ‘கேன் கிட்ஸ் கிட்ஸ் கேன்’ அமைப்​புடன் ஒப்​பந்​தம், தற்​கொலை தடுப்பு மற்​றும் மனநல ஆலோ​சனைக்கு ‘சினேகா ஃபவுண்​டேஷன்’ உடன் ஒப்​பந்​தம் என தமிழக அரசு பல்​வேறு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களை​யும் மேற்​கொண்டு வரு​கிறது.

அரசு மருத்​து​வர்​களை​யும், தனி​யார் மருத்​து​வர்​களை​யும் ஒட்​டுமொத்​த​மாக ‘மருத்​துவ நட்​சத்​திரம்’ என அங்​கீகரித்து அவர்​களுக்​கான விருதுகள் வழங்​கப்​படு​வது சாலச்​சிறந்​தது. இதைத் தொடர்ந்து 5 ஆண்​டு​களாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்து வரு​வதும், அதில் நானே சிறப்பு விருந்​தின​ராக வரு​வதற்​கான வாய்ப்பை பெற்​றிருப்​பதும் எனக்கு மிகப்​பெரிய பெரு​மையளிக்​கக் கூடியது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில், இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் தமிழக தலை​வர் பி.செங்​குட்​டு​வன் பேசி​ய​தாவது: ‘இந்து தமிழ் திசை’ மூலம் வழங்​கப்​படும் மருத்​துவ நட்​சத்​திரம் விருது அனை​வரும் எதிர்​பார்க்​கக் கூடிய விருதுகளில் ஒன்​று. அந்த வகை​யில், இன்​றைக்கு விருதுபெற்ற அனைத்து மருத்​து​வர்​களுக்​கும் எனது பாராட்​டு​கள். தமிழகத்​தில் தொடர்ந்து மருத்​து​வர்​களை ஊக்​கப்​படுத்​தும் வித​மாக, ‘இந்து தமிழ் திசை’ இவ்​விருதுகளை வழங்​கு​வது போற்​றக்கூடியது. விருதுகளை பெற்ற மருத்​து​வர்​கள் தங்​களது பணி​களை மேலும் சிறப்​பாக செய்ய வாழ்த்​துகிறேன்.

பேராசிரியர் ரவி பட்​னாகர் பேசி​யதாவது: கரோனா காலத்​தில் லட்​சக்​கணக்​கான மக்​களை காப்​பாற்​றிய​வர்​களில் நானும் ஒரு​வன் என்​ப​தில் பெரு​மைப்​படு​கிறேன். சுகா​தா​ரம் தான் நல்ல ஆரோக்​கி​யத்​தின் அடிப்​படை என்​ப​தால், பொது சுகா​தா​ரத்தை வலுப்​படுத்த நாங்​கள் உழைத்து வரு​கிறோம். நான் சென்​னை​யில் தான் படித்து பட்​டம் பெற்​றேன்.

நான் எப்​போதும் இந்த மாநிலத்​துக்கு நன்​றி​யுள்​ளவ​னாக இருப்​பேன். எங்​களு​டன் இணைந்து பணி​யாற்​றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்​றி என்றார். இந்​திய மருத்​துவ சங்​கத்​தின் மதிப்​புறு மாநில செய​லா​ளர் எஸ்​.​கார்த்​திக் பிரபு பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 50-க்​கும் குறை​வான படுக்​கைகளை கொண்ட 7,500 தனி​யார் மருத்​து​வ​மனை​களும், 100-க்​கும் அதி​க​மான படுக்​கைகளை கொண்ட 355 மருத்​து​வ​மனை​களும் இயங்கி வரு​கின்​றன.

இதை தவிர, 28 ஆயிரம் தனி​யார் புறநோ​யாளி​கள் மையங்​கள் உள்​ளன. தமிழகம் முழு​வதும் பரவி​யிருக்​கும் தனி​யார் மற்​றும் அரசு மருத்​து​வ​மனை​கள் மாதிரி மற்ற மாநிலங்​களில் கிடை​யாது என்​ப​தால் தமிழகத்​தில் மருத்​து​வம் மற்ற மாநிலங்களை காட்​டிலும் சிறந்த நிலை​யில் இருக்​கிறது என்றார்.

இந்​நிகழ்​வில், ‘இந்து தமிழ் திசை’ இணை​யதள ஆசிரியர் பாரதி தமிழன் வரவேற்​புரை ஆற்​றி​னார். முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேசன் விழாவை தொகுத்து வழங்​கி​னார்.

<div class="paragraphs"><p>மருத்துவர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘இந்து தமிழ் திசை - மருத்துவ நட்சத்திரம் 2025’ விருதுகள் வழங்கும் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, பேராசிரியர் ரவி பட்​னாகர், ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் வி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பி.செங்குட்டுவன், செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, நிதி  செயலாளர்  எஸ்.கவுரி சங்கர், ‘இந்து தமிழ் திசை’யின் விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
இந்தியாவை வளர்ந்த நாடாக்க கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in