

படம்: எஸ்.சத்தியசீலன்
எல்ஐசி வழங்கும் இந்து தமிழ் திசை' - குழந்தைகள் தின சிறப்பு போட்டிகளில் வென்ற பள்ளிக் குழந்தைகளுக்கு பேரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான நவ.4-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி, ஆயுள் காப்பீட் டுக் கழகம் (எல்ஐசி) வழங்கும் 'இந்து தமிழ் திசை - குழந்தைகள் தின சிறப்பு போட்டிகள் மாநில அளவில் அறிவிக்கப் பட்டன. இந்த போட்டிகளை வேலம்மாள் போதி கேம்பஸ், பென்சி கிட்ஸ் பிளே ஸ்கூல், ஃபிகோ நிறுவனம் ஆகியவற் றுடன் இணைந்து நடத்தியது.
இதில், சென்னை மண்டல அளவில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங் கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள 'இந்து தமிழ் திசை' தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 'இந்து தமிழ் திசை இணையதள பிரிவு ஆசிரியர் பாரதி தமிழன் வரவேற்றார். விளம்பரப் பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
எல்ஐசி நிறு வனத்தின் மண்டல மேலாளர் (நிறுவனத் தொடர்பு) சுசி கிருஷ்ணவேணி பங்கேற்று, பேச்சுப் போட்டியில் வென்ற சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரா.வசிதரன், அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி மாணவி நி.செ.மேகா, கட்டுரைப் போட்டியில் வென்ற சாலிகிராமம் ஸ்ரீ சைல்டு ஃபுரூட் மெட்ரிக் பள்ளி மாணவர் எம்.தனுஷ், ஆவடி கிரேட் ஹார்வெஸ்ட் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.கோகுலஸ்ரீ, பெருங்குடி திரு வள்ளுவர் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி வி.சாய்கிருத்திகா ஆகியோருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுசி கிருஷ்ணவேணி பேசி யபோது, "குழந்தைகள்தான் நாட்டின் எதிர் காலம். வாழ்வில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் உலக அளவில் கொட்டிக் கிடக்கின்றன. அதைப் பெற படிப்பு அவசியம். அதேநேரம், அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பெற் றோர் கற்றுத்தர வேண்டும். ஒருவரை கீழே தள்ளிவிட்டு முன்னுக்கு வருவது சரியல்ல.
அனைவரும் ஒன்றாக முன்னுக்கு வரகற்றுத் தர வேண்டும். குழந்தைகளிடம் தனிமனித ஒழுக்கம் மேம்பட வேண்டும். குழந்தைகள், பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டும்" என்றார். நிறைவாக, 'இந்து தமிழ் திசை முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நன்றி கூறினார்.