சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி

இந்து தமிழ் திசை - கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் நிகழ்வு
சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
Updated on
2 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்​கும் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை தி.நகரிலுள்ள வாணி மஹாலில் வரும் ஞாயிறன்று (மே 24) காலை 9 மணிக்கு நடை​பெற உள்​ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்​டும் என்ற ஆசை பலருக்​கும் உண்​டு. ஆனால், அதற்​கான அடிப்​படைத் தேவை​யான கல்​வித் தகுதி என்ன, எத்​தனை ஆண்​டு​கள் படிக்க வேண்​டும், அதிக செல​வாகுமா என ஏராள​மான கேள்வி​களு​டன் தயங்கி நிற்​பவர்​களே அதி​கம்.

அவ்​வாறான தயக்​கத்​தைப் போக்​கி, யுபிஎஸ்சி தேர்​வுக்​குப் படிப்பதற்​கான தெளி​வைத் தரும் நோக்​கில் ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்​களுக்​காக நடத்​தப்​படு​கிறது.

இந்த நிகழ்ச்​சி​யில், தமிழக அரசின் மேனாள் தலை​மைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தேசி​யப் பேரிடர் மேலாண்மை ஆணை​யத்​தின் மேனாள் ஆலோ​சகர் வெ.​திருப்​பு​கழ் ஐஏஎஸ் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாகப் பங்​கேற்று ஆலோசனைகளை வழங்​க​ உள்​ளனர்.

<div class="paragraphs"><p>இறையன்பு, வெ.​திருப்​பு​கழ்</p></div>

இறையன்பு, வெ.​திருப்​பு​கழ்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிகழ்வு ஒருங்​கிணைப்பு மற்​றும் விற்​பனை பிரிவு உதவிப் பொது​மேலா​ளர் மு.​முரு​கேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் மற்​றும் மேலாண்மை இயக்​குநர் சத்ய பூமி​நாதன் ஆகியோர் ஊக்​க​வுரை​யாற்ற இருக்கிறார்​கள்.

காலை 9 மணிக்​குத் தொடங்​கும் இந்த நிகழ்ச்சி மதி​யம் ஒரு மணி வரை நடை​பெறும். இந்த நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்​தாள், பாடத்திட்டக் கையேடு இலவச​மாக வழங்​கப்​படு​கிறது.

மேலும், தேர்வு செய்​யப்​படும் 3 பேருக்கு இலவசப் பயிற்​சி​யும் கிங்​மேக்​கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்​பில் வழங்​கப்பட உள்​ளது. இந்​நிகழ்​வில் பங்​கேற்க விரும்​புவோர் கீழே உள்ள க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்​து,பதிவு செய்​து​கொள்​ள​வும். கூடு​தல் விவரங்​களை அறிந்​து​கொள்ள 94442 27273 என்ற எண்​ணுக்கு தொடர்​பு​கொள்ளலாம்​.

சென்னையில் மே 24-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் - மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in