“புத்தகம் வாசித்தால் நேசிக்கும் எண்ணம் தானாக வரும்” - ‘இந்து தமிழ் திசை - வாசிப்பை நேசிப்போம்’ நிகழ்வில் டி.ஜெயசீலன் கருத்து

எஸ்எஸ்எல்எஃப் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்து தமிழ் திசை - `வாசிப்பை நேசிப்போம்' எனும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் உரையாற்றினார். உடன் அறக்கட்டளை நிறுவனர் ஜி.சக்திவேல், கல்வியாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல் காதர், கிரசண்ட் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.முருகேசன், பல்கலைக்கழக ரீடர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் நஸ்னீன் உள்ளிட்டோர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
எஸ்எஸ்எல்எஃப் கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்து தமிழ் திசை - `வாசிப்பை நேசிப்போம்' எனும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் உரையாற்றினார். உடன் அறக்கட்டளை நிறுவனர் ஜி.சக்திவேல், கல்வியாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்துல் காதர், கிரசண்ட் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.முருகேசன், பல்கலைக்கழக ரீடர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் நஸ்னீன் உள்ளிட்டோர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
Updated on
2 min read

வண்டலூர்: புத்​தகங்​களை வாசிப்​பவர்​களுக்கு அடுத்​தவர்​களை நேசிக்​கும் எண்​ணம் தானாக வரும் என, மத்​திய அரசின் பாதுகாப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் டி.ஜெயசீலன் கூறி​னார்.

எஸ்​.எஸ்​.எல்​.எஃப். கல்வி அறக்​கட்​டளை வழங்​கும் இந்து தமிழ் திசை - ‘வாசிப்பை நேசிப்​போம்’ எனும் நிகழ்​வு, வாசிப்​பின் வழியே புதிய உலகை காண்​போம் என்ற கருப்​பொருளு​டன், புத்தக வாசிப்பு பழக்​கத்தை மாணவரிடம் கொண்டு செல்​லும் முயற்​சி​யாக, வண்​டலூரில் உள்ள பி.எஸ்​.அப்​துர் ரஹ்​மான் கிரசண்ட் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்வி நிறுவன அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. கிரசண்ட் பல்​கலைக்​கழக துணைவேந்​தர் டி.​முரு​கேசன் தலை​மை​யுரை ஆற்​றினர்.

கிரசண்ட் பல்​கலைக்​கழக ரீடர் கிளப் ஒருங்​கிணைப்​பாளர் பி. பன்​னீர்​செல்​வம் அனை​வரை​யும் வரவேற்​றார். நிகழ்ச்​சி​யில், சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற மத்​திய அரசின் பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் டி. ஜெயசீலன் பேசி​ய​தாவது: கல்​வி, அறி​வு, ஞானம் இவை மூன்​றுக்​கும் என்ன வித்​தி​யாசம்.

மூன்​றும் பின்​னிப்​பிணைந்த தொகுப்​பாக இருக்​கிறது. அதனை பகுப்​பாய்ந்து பார்க்க வேண்​டும். கல்வி என்​பது ஒரு மாணவனை மனித​னாக மாற்​று​வது. வாழ்க்​கை​யில் கல்வி கற்​போர்க்​கு எந்த செல்​வ​மும் தேவைப்​ப​டாது. கல்வி ஏழு தலை​முறைக்​கும் உதவி​யாக இருக்​கும். கல்வி இல்​லாத மனிதன் சிறகு இல்​லாத பறவைக்கு ஒப்​பானவன்.

வாசிப்பு என்​பது நீங்​கள் படிக்​கும் பாட புத்​தகம் மட்​டும் அல்ல, அதை​யும் தாண்டி பல்​வேறு புத்​தகங்​களை படிக்க வேண்​டும். காந்தி புத்​தகத்தை படிக்​க​வில்லை என்​றால், அகிம்சை மூலம் சுதந்​திரம் வாங்கி கொடுத்​திருக்க முடி​யாது.

எலான் மஸ்க், பில்​கேட்ஸ் ஆகியோர் புத்​தகங்​களை படித்​த​தால் இன்று உயர்ந்த நிலை​யில் இருக்​கின்​றனர். ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதனை தலைவனாகவும், வீரனாகவும் மாற்றும். பலரை மாற்றியும் இருக்கிறது. வாசிப்பை நேசிக்கும் போது தான் கல்வி அறிவாக மாறுகிறது. அறிவின் முதிர்ச்சி தான் ஞானம்.

தலைமை பண்பு உங்​களுக்​குள் வர வேண்​டும் என்​றால், பல புத்​தகங்​களை படிக்க வேண்​டும். புத்​தகங்​களை வாசிக்​கும் எண்​ணம் இருந்​தால், அடுத்​தவர்​களை நேசிக்​கும் எண்​ணம்தானாக வரும். வாசிப்பு பழக்​கமே மனிதனை தான் இருக்​கும் நிலையை விட, அடுத்த நிலைக்கு கொண்டு செல்​லும்.

இன்று அரு​கில் அமர்ந்​திருக்​கும் நபர்​களை நாம் பார்ப்​பது கிடை​யாது. செல்​போன் பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். உறவு​களை மறந்து விட்​டோம். நேசங்​களை மறந்து விட்​டோம். வாசிப்​பை​யும் மறந்து விட்​டோம். செல்​போனிலேயே முழு கவனத்​தை​யும் செலுத்தி விட்​டோம். செல்​போனை அளவோடு பயன்​படுத்​து​வது நல்​லது.

தினமும் 3 மணி நேரம்.. ஒரு நாளைக்கு குறைந்​த​பட்​சம் 3 மணி நேர​மாவது ஒதுக்கி பாட புத்​தகங்​கள் அல்​லது மற்ற புத்​தகங்​களை படிக்க வேண்​டும். வாழ்க்கை என்பது ஒரு​முறை தான். நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். யாரெல்​லாம் உங்​களை வாழ தகு​தி​யற்​றவர்​கள் என்று சொன்​னார்​களோ, அவர்​கள் முன்பு நீங்​கள் வாழ்ந்து காட்டலாம். வாழ்க்கை வாழ்​வதற்கு தான், வீழ்​வதற்கு அல்ல. இவ்​வாறு ஜெயசீலன் பேசினார்.

எஸ்​.எஸ்​.எல்​.எஃப். கல்வி அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் முனை​வர் ஜி.சக்​திவேல் பேசுகை​யில், வாழ்​வின் அடுத்த நிலைக்​குச் செல்​ல​வும், உச்​சத்தை அடைய​வும் புத்தக வாசிப்பு மட்​டுமே நமக்கு உதவும். மத்​திய, மாநில அரசுகள் கல்வி நிறு​வனங்​கள் அனைத்​தும் வாசிப்பு பழக்​கத்தை ஊக்​கப்​படுத்த நூல் நிலை​யங்​களை அமைத்​துள்​ளது.

வாழ்க்கையில் விளிம்பு நிலையில் உள்ள மக்களைக் கண்டறிந்து அவர்கள் முன்னேற்றுவதற்காக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். புத்​தகம் படிக்​கும் பழக்​கத்தை வளர்த்​துக் கொள்​ளுங்​கள். நீங்​கள் வளர்​வது மட்​டுமல்ல, அது நம் நாட்​டை​யும்முன்​னேற்​றும். பணம் சம்​பா​திக்க முடி​யும், நேரத்தைச் சம்​பாதிக்க முடி​யாது என்​பதை மாணவர்​கள் உணர்ந்து கொள்ள வேண்​டும் என்​றார்.

கல்​வி​யாளர் மற்​றும் எழுத்​தாளர் பேராசிரியர் ஏ.முகமது அப்​துல்​காதர் தனது உரை​யில், படிக்​கும் பழக்​கத்தை மாணவர்​கள் வளர்த்​துக் கொள்ள வேண்​டும் அதுவே உங்​களை வாழ்க்​கை​யில் முன்​னேற்​றத்​துக்கு கொண்டு செல்​லும். புத்​தகம் உங்​கள் வாழ்​வில் வெற்​றியை தீர்​மானிக்​கும். மனதை​யும் சூழலை​யும் மகிழ்ச்​சி​யாக வைத்​திருக்​கும். அனுபவத்​தின் முதல் ஆசான் புத்​தகமே என்​றார்.

நிகழ்ச்​சி​யில், கிரசண்ட் பல்​கலைக்​கழக ரீடர் கிளப் இணை ஒருங்​கிணைப்​பாளர் நஸ்​னீன், பேராசிரியர்​கள், பல்​வேறு துறை​களைச் சேர்ந்த மாணவர்கள்​ கலந்​து கொண்​டனர். ‘இந்​து தமிழ்​ திசை’ நாளிதழின்​ முது​நிலை உதவி ஆசிரியர்​ மு.​முரு​கேசன்​ தொகுத்​து வழங்​கி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in