போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் தினமும் நாளிதழ் வாசிப்பவர்களாகவே இருப்பார்கள் - ‘இந்து தமிழ் திசை’ வாசிப்புத் திருவிழாவில் இறையன்பு பேச்சு

காஞ்சிபுரத்தில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடைபெற்ற  வாசிப்புத் திருவிழாவில் பேசுகிறார்  தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு. உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
காஞ்சிபுரத்தில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடைபெற்ற வாசிப்புத் திருவிழாவில் பேசுகிறார் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு. உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
Updated on
2 min read

காஞ்சிபுரம்: ​போட்​டித் தேர்​வு​களில் வெல்​பவர்​கள் தின​மும் தவறாது நாளிதழ் வாசிப்​பவர்​களாகவே இருப்​பார்​கள் என்று தமிழக அரசின் முன்​னாள் தலை​மைச் செயலர் வெ.இறையன்பு கூறி​னார். ‘இந்து தமிழ் திசை’ சார்​பில் காஞ்​சிபுரம் தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமு​தாயக் கூட அரங்​கில் நேற்று வாசிப்​புத் திரு​விழா நடை​பெற்​றது.

சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற வெ.இறையன்பு பேசி​ய​தாவது: தற்​போது வாசிப்பு பழக்​கம் குறைந்து வரு​கிறது. இந்​த பழக்​கத்தை அதி​கரிக்க வேண்​டியது அவசி​யம். வாசிப்பு பழக்​கம் அதி​கரிக்​கும்​போது​தான் சிந்​தனைத் திறன், மொழியறி​வு, கிரகிக்கும் திறன் வளரும். வாசிப்பு திறன் அதி​கரிக்க தின​மும் செய்​தித்​தாள் படிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்க வேண்​டும்.

குறைந்த விலை​யில் நாளிதழ்​கள் கிடைக்​கின்​றன. அவற்​றில் பல்​சுவை செய்​தி​கள் இருப்​ப​தால், நாளிதழ் வாசிப்பு பழக்​கம் இனிமை​யான அனுபவத்தை உரு​வாக்​கும். வாசிக்க வேண்​டும் என்ற எண்​ண​மும் அதி​கரிக்​கும். போட்​டித் தேர்​வு​களில் வெற்றி பெற்​றவர்​கள் பெரும்​பாலும் தின​மும் நாளிதழ்​களை வாசிக்​கும் பழக்​கம் உள்​ளவர்​களாகவே இருப்​பார்​கள்.

அதே​போல, புத்தக வாசிப்பு அறிவை​யும், மொழி வளத்​தை​யும், கற்​பனைத் திறனை​யும் அதி​கரிக்​கும். வாழ்​வில் சோர்​வை​யும், தளர்ச்​சி​யை​யும் புத்தக வாசிப்பு போக்​கும். புத்​தகம் வாசிக்​கும்​போது தொலைநோக்​குப் பார்வை உண்​டாகும். பல்​வேறு பெரிய மனிதர்​களின் புத்​தகங்​களை வாசிக்​கும்​போது, அவர்​கள் எதிர்​கொண்ட சிக்​கல்​களை நம்​மால் உணர முடி​யும். அதன் மூலம் நமக்கு ஏற்​படும் பிரச்​சினை​கள், சிக்​கல்​களுக்கு எளி​தில் தீர்வு​காண முடி​யும்.

அலெக்​சாண்​டர், காரல் மார்க்​ஸ், அம்​பேத்​கர் போன்​றவர்​கள் புத்​தகம் வாசிப்​ப​தில் அதிக ஆர்​வம் கொண்​ட​வர்​கள். அதே​போல, மகாத்மா காந்​தி, நெல்​சன் மண்​டேலா போன்​றவர்​களும் புத்தக வாசிப்​பில் பிரி​யம் கொண்​ட​வர்​கள்.

எனவே, மாணவர்​கள், சிறுவர்​கள் மத்​தி​யில் வாசிப்பு ஆர்​வத்தை உரு​வாக்க வேண்​டும். புத்​தகங்​களை வாசிக்​கும் பழக்​கம் உரு​வாகும்​போது, பள்ளி பாடங்​களில் கவனம் குறை​யுமோ என்ற எண்​ணம் பலருக்​கும் உள்​ளது. ஆனால் அது தவறானது. வாசிக்​கும் பழக்​கம் மேம்​படும்​போது, மாணவர்​களின் பாடங்​களைப் படிக்​கும் திறன் அதி​கரிக்​கும்.

பாடப் புத்​தகங்​களில் உள்ள கருத்​துகளை எளி​தில் உள்​வாங்​கிக் கொள்​வர். எனவே, பெற்​றோர் தங்​கள் குழந்​தைகளிடம் வாசிக்​கும் பழக்​கத்தை உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு வெ.இறையன்பு பேசி​னார். மாவட்ட ஆட்​சி​யர் கலைச்​செல்வி மோகன் பேசும்​போது, "மாணவர்​கள், படித்த இளைஞர்​கள் மத்​தி​யிலேயே வாசிக்​கும் பழக்​கம் குறைந்து வரு​கிறது. வாசிக்​கும் பழக்​கத்தை அதி​கரிக்க, `இந்து தமிழ் திசை' நடத்​தும் வாசிப்​புத் திரு​விழா போன்ற நிகழ்ச்​சிகள் உதவும். தற்​போது `ரீல்​ஸ்' போன்​றவற்​றையே பலர் அதி​கம் பார்க்​கின்​றனர்.

வாசிப்பு பழக்​கம் அதி​கரிக்​கும்​போது​தான் மொழியறி​வு, சிந்​தனைத் திறன் ஆகியவை மேம்​படும். தமிழக அரசு பொது​மக்​களிடம் வாசிப்பு பழக்​கத்தை அதி​கரிப்​ப​தற்​காக, பல்​வேறு புத்​தகங்​களை வெளி​யிட்டு வரு​கிறது" என்​றார். நிகழ்ச்​சி​யில், மாணவர்​கள், பொது​மக்​கள் மற்​றும் ஐஏஎஸ் தேர்​வுக்கு தயா​ராகும் இளைஞர்​கள் உள்​ளிட்​டோருக்​கு, வாசிக்​கும் திறனை வளர்த்​துக் கொள்​வதற்​கான வழி​முறை​களை இறையன்பு விளக்​கி​னார்.

மேலும், அவர்​களது பல்​வேறு கேள்வி​களுக்கு பதில் அளித்​தார்.நிகழ்ச்​சி​யில், மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் (பொறுப்​பு) நளினி, பிர​முகர்​கள் ஸ்டா​லின், மனோகரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சியை `இந்து தமிழ் திசை' முது​நிலை உதவி ஆசிரியர் மு.​முரு​கேஷ் தொகுத்து வழங்​கி​னார்.

இந்​நிகழ்ச்​சியை ஈவா ஸ்டா​லின் ஐஏஎஸ் அகாட​மி, ஓலோ கிட்​ஸ், காஞ்​சிபுரம் எஸ்​.எம். சில்க்​ஸ், எஸ்​.ஆர்​.எம். குளோபல் ஹாஸ்​பிடல், காஞ்​சிபுரம் பீட்டா மவுன்ட் லிட்​ரஸீ பள்​ளி, சென்னை பீட்டா மெட்​ரிக் மேல்​நிலைப் பள்​ளி, காஞ்சி வாணி வித்​யாலயா சிபிஎஸ்சி பள்​ளி, காஞ்​சிபுரம் ஜி.​ராஜம் செட்டி அண்டு சன்​ஸ் ஆகியவை இணைந்து வழங்​கின. இந்த நிகழ்ச்​சி​யில் ஏராள​மான மாணவர்​கள்​, பொது​மக்​கள்​, புத்​தகவாசிப்​பில்​ ஆர்​வம்​ கொண்​ட இளைஞர்​கள்​ உள்​ளிட்​டோர்​ திரளாக​ பங்​கேற்​றனர்​.

மாணவர் வாசித்த கவிதை: காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ர.காமாட்சிமித்ரன், ‘வாசிப்புத் திருவிழா’ குறித்து ‘அறிவுக் கண்ணை திறக்க’ என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். அவரது கவிதை..

அறநூல்களை வாசிக்க பழகு
ஆத்திச்சூடியை வாசிக்க பழகு
இலக்கியங்களை வாசிக்க பழகு
ஈரடியை வாசிக்க பழகு
உலகநீதியை வாசிக்க பழகு
ஊக்கம் பெற வாசிக்க பழகு
எழுச்சியுடன் வாசிக்க பழகு
ஏற்றம் பெற வாசிக்க பழகு
ஐயமின்றி வாசிக்க பழகு
ஒலியுடன் வாசிக்க பழகு
ஒழுக்கமாய் இருக்க வாசிக்க பழகு
ஒளவை சொன்னபடி வாசிக்க பழகு
அஃதே நம் வாழ்க்கைக்கு அழகு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in