கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி

Published on

சென்னை: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ -‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி கோவை பீளமேட்டிலுள்ள பிஎஸ்ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அரங்கில் வரும் ஞாயிறன்று (மே 12) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக காவல் துறையின் மேனாள் டிஜிபி மு.ரவி, ஐபிஎஸ்., தமிழக அரசின் எல்காட் மேனாள் தலைவர் விவேக் ஹரிநாராயண், ஐஏஎஸ்., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஊக்கவுரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.


இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் இந்த https://bit.ly/uoias241 லிங்கில் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, பதிவு செய்துகொண்டு பங்கேற்று பயனடையலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in