

சென்னை: விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ – ‘வாழப்பிறந்தவர் நாம்’ எனும் வழிகாட்டி நிகழ்வு வரும் மே 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக சியுஐசி அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
இன்றைய தலைமுறை மாணவர்களில் சிலர் தேர்வில் தோல்வி ஏற்பட்டால் மனம் தளர்ந்து போவதும், தவறான பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்வதும், குழப்பங்களுக்கு தீர்வு தெரியாமல் அல்லாடும் நிலையிலும் உள்ளனர். அப்படியானவர்களுக்கான தெளிவினையும் மன உறுதியையும் உண்டாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், எழுத்தாளரும் உரையாளருமான வெ.இறையன்பு, சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/VN01 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.