விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘வாழப்பிறந்தவர் நாம்’ தோல்விகளை தாண்டி வெல்வதற்கான வழிகாட்டி நிகழ்வு

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘வாழப்பிறந்தவர் நாம்’ தோல்விகளை தாண்டி வெல்வதற்கான வழிகாட்டி நிகழ்வு
Updated on
1 min read

சென்னை: விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ – ‘வாழப்பிறந்தவர் நாம்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மே 4-ம் தேதி (சனி) காலை 10 மணிக்கு சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக சியுஐசி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினீயரிங் காலேஜ், சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

இன்றைய தலைமுறை மாணவர்களில் சிலர் தேர்வில் தோல்வி ஏற்பட்டால் மனம் தளர்ந்து போவதுமற்றும் தவறான பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்வதோடு, குழப்பங்களுக்குத் தீர்வு தெரியாமல் அல்லாடும் நிலையில் உள்ளனர்.

ஆளுமைகள் உரை: அத்தகைய மாணவர்களுக்கு தெளிவையும் மனஉறுதியையும் உண்டாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், எழுத்தாளரும் உரையாளருமான வெ.இறையன்பு, சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/VN01 என்ற லிங்க்கில் அல்லது அருகில் உள்ள ‘க்யூஆர்’ கோடு மூலமாகப் பதிவு செய்து பங்கேற் கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in