Last Updated : 14 Dec, 2023 05:40 PM

 

Published : 14 Dec 2023 05:40 PM
Last Updated : 14 Dec 2023 05:40 PM

விஐடி பல்கலைக்கழகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - 'நாளைய விஞ்ஞானி 2023’ அறிவியல் திருவிழா மாணவர்கள் பதிவு செய்துகொள்ள நாளை (டிச.15) கடைசி நாள்

சென்னை : வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (VIT) வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘நாளைய விஞ்ஞானி 2023’ எனும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான அறிவியல் நிகழ்வு நடைபெற உள்ளது.

மாணவர்களிடம் மறைந்திருக்கும் அறிவியல் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க, மாணவர்கள் தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்வதோடு, அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்தப் பிரச்சினைக்கு எப்படியான தீர்வு காணலாம் என்பது குறித்து ஒரு பக்க அளவில் சுருக்கமாக எழுதி அனுப்புங்கள்.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளின் (அரசுப்பள்ளி / மெட்ரிக் பள்ளி / சிபிஎஸ்சி பள்ளி) மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நாளைக்குள் (டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை) பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த அறிவியல் திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லா பொறியாளர்கள் – இந்தியா (பெங்களூரு பிரிவு) ஆகியன இணைந்துள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு, மதுரை மண்டலம் – எஸ்.டி.பாலகிருஷ்ணன் - 94436 68881 , கோவை மண்டலம் - எம்.தியாகராஜன் - 94880 54683, திருச்சி மண்டலம் - எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் - 94867 66565, சென்னை மண்டலம் - எல்.நாராயணசாமி - 99440 52435 ஆகிய மண்டல வாரியான அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இத்துடன் உள்ள லிங்கில் https://www.htamil.org/NV2023 அல்லது QR Code-ஐ ஸ்கேன் செய்து, தங்களது ஆய்வினைப் பதிவு செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x