நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு: மெரில் நிறுவன நிகழ்வில் தோனி பங்கேற்பு

நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு: மெரில் நிறுவன நிகழ்வில் தோனி பங்கேற்பு

Published on

சென்னை: குஜ​ராத் மாநிலம் வாபி​யில் உள்ள மெரில் நிறுவனத்​தின் தலை​மையகத்​துக்கு இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் எம்​.எஸ்​.தோனி வருகைபுரிந்​து, “குழந்​தைப் பரு​வம் ஓய்வு பெறக்​கூ​டாது” எனும் கருப்​பொருளில் நெகிழ்ச்​சி​யும், ஊக்​க​மும் நிறைந்த கலந்​துரை​யாடலில் ஈடு​பட்​டார்.

மெரில் என்​பது ஓர் உலகளா​விய மருத்​துவ சாதன நிறுவனமாகும். ரத்​த​நாள சிகிச்சை சாதனங்​கள், எலும்பியல் சாதனங்​கள் உள்​ளிட்​ட​வற்றை இந்​நிறு​வனம் உற்​பத்தி செய்து வரு​கிறது.

நோய்​களை சரி​யான நேரத்​தில் கண்​டறிவது, நவீன மருத்துவ சிகிச்​சைகளை அணுகு​வது குறித்த விழிப்புணர்வை வலுப்​படுத்​தும் நோக்​கில் மெரில் நிறுவனம் ‘சிகிச்சை அவசி​யம்’ (Treatment Zaroori Hai) என்ற மக்​கள் சுகா​தார இயக்​கத்தை முன்​னெடுத்​துள்​ளது.

இதன் ஒருபகு​தி​யாக தோனி இந்​நிகழ்​வில் உரையாற்றினார். இந்த இயக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக இதய, எலும்​பியல், வயது தொடர்​பான பிற நோய்​களை முன்​கூட்​டியே கண்​டறிதல், தடுப்பு பரிசோதனை​கள், புதுமை​யான சிகிச்சை முறை​களை அணுகுதல் ஆகிய​வற்றை இந்த பிரச்​சா​ரம் வலி​யுறுத்​துகிறது.

நிகழ்ச்​சி​யில் எம்​.எஸ்​.தோனி பேசும்போது, “உங்​கள் உடல் நலனைப் பேணுவது என்​பது, உங்​களுக்​காக​வும் உங்களை நேசிப்​பவர்​களுக்​காக​வும் நீங்​கள் செய்ய வேண்​டிய மிக முக்​கிய​மான செயல்​களில் ஒன்று என்று நான் எப்​போதும் உறு​தி​யாக நம்​பு​கிறேன்.

நம் பெற்​றோரும் தாத்தா பாட்​டிகளும் தங்​களுக்​குத் தகுதியான கவனிப்​பு, அக்​கறை, ஆதர​வைப் பெறு​வதை உறு​தி​செய்​வது நம் அனை​வருக்​கும், குறிப்​பாக இளைய தலை​முறை​யினருக்கு உள்ள பொறுப்​பாகும்.

‘சிகிச்சை அவசி​யம்’ என்ற முன்​னெடுப்​பு​கள் அந்த திசையில் எடுக்​கப்​படும் ஒரு படி​யாகும். இதில் நானும் ஓர் அங்​க​மாக இருப்​ப​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன்” என்​று குறிப்​பிட்​டார்.

நோய்களை சரியான நேரத்தில் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு: மெரில் நிறுவன நிகழ்வில் தோனி பங்கேற்பு
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in