Published : 28 May 2023 06:20 PM
Last Updated : 28 May 2023 06:20 PM

தமிழ்நாட்டில் Cadbury Dairy Milk உடன் ஓர் உண்மையான ‘இனிய கொண்டாட்டம்’!

சங்கீதா வெஜ் ரெஸ்டாரன்ட், கங்கா ஸ்வீட்ஸ் மற்றும் ஹாட் பிரெட்ஸ் கடைகளில் உங்கள் மனம் கவர்ந்த பிரபலங்களின் பெயர்களில் உள்ள இனிப்புகள் க(உ)ண்டு மகிழுங்கள்.

காட்பரி டைரி மில்க்-ன் ‘காட்பரி இனிய கொண்டாட்டம்’என்பது தமிழ்நாட்டில் உணவு மற்றும் பாரம்பரியத்திற்கான சிறந்த ஒரு கொண்டாட்டமாகும். ‘தி இந்து’ உடன் இணைந்து காட்பரி மேற்கொள்ளும் இந்தப் புதிய முன்னெடுப்பு, மாநிலத்தின் விருப்பமான பிரபலங்களுடன் மக்களை ஒரு நீண்ட சமையல் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. சங்கீதா ரெஸ்டாரன்ட், கங்கா ஸ்வீட்ஸ் மற்றும் ஹாட் பிரெட்ஸ் ஆகியவை இந்தச் சுவையானதும், சுவாரஸ்யமானதுமான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளன.

இந்த முன்னெடுப்பின் சிறப்பான ஒன்றாக காட்பரிஸின் 5 இனிப்பு வகைகளுக்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர், பாடகி சிவாங்கி கிருஷ்ண குமார், பாடலாசிரியர் - பாடகர் - ராப்பர் அறிவு மற்றும் பிரபல ஷெஃப் தாமு ஆகிய 5 பிரபலங்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரபல சமையற்கலை நிபுணரும், உணவு வரலாற்றாசிரியருமான ராகேஷ் ரகுநாதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இனிப்பு வகைகள், சென்னையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் கிடைக்கின்றன.

தனித்துவம்மிக்க இந்தப் பிரச்சார யுக்தி சென்னை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஷெஃப் ராகேஷ் ரகுநாதனுடன் 5 பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கும் வேடிக்கையான 5 பாகங்கள் கொண்ட யூடியூப் வெப் சீரிஸ் பார்வையாளர்களிடம் உடனடியான அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த புத்துணர்வு மிக்க உரையாடல் நிகழ்வு, அந்தப் பிரபலங்களின் தெரியாத பக்கங்களை மட்டும் நமக்கு சொல்லவில்லை, அவர்கள் பெயரிலான தனித்துவமான இனிப்பு தயாரிப்பையும் நமக்குத் தெரிவிக்கிறது.

தினேஷ் கார்த்திக் - உண்மையான கிரிக்கெட் சாம்பியனான இவர், களத்தில் காட்டியிருக்கும் திறமை அனைவரும் அறிந்ததே. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கும் தினேஷ் கார்த்திக் இப்போது ஒரு இனிப்பின் பெயரால் அறியப்படுகிறார். சிறுவயதில் அவருக்கு மிகவும் பிடித்த பால் அல்வா இப்போது சாக்லேட் சுவையைப் பெற்றுள்ளது. அதன் விளைவாக தினேஷ் ‘கார்த்திக்கின் சாக்லேட் பால் அல்வா’ பிறந்தது. இது இப்பிரச்சாரத்திற்காக தனித்துவமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஷெஃப் தாமுவைப் பொறுத்தவரையில், அவருக்கு பிடித்தமான இனிப்பு பட்டியலில் ‘சர்க்கரைப் பொங்கல்’ அல்லது ‘இனிப்பு பொங்கல்’ எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் காட்பரி டைரி மில்க், ‘சாக்லெட் பொங்கல்’-ஐ உருவாக்கியுள்ளது. இந்த புதிய சாக்லெட் பொங்கலின் சுவை, அவருக்கு விருப்பமான சர்க்கரை பொங்கலை விட சிறப்பாக இருப்பதாக ஷெஃப் தாமு உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், சிறுவயதில் அவருக்கு அதிரசம் மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஆனாலும் அம்மா செய்துதரும் பயத்தம் பருப்பு பாயாசம் அவருக்கு எப்போதும் பிடித்தமான இனிப்பாக இருக்கிறது. பிஸியான ஷூட்டிங் மற்றும் டயட் கட்டுப்பாடுகளால் அவரால் முன்பு போல் அதை ருசிக்க முடியவில்லை. இந்த புதிய பிரச்சாரத்தின் மூலமாக, ‘பிரியா பவானி சங்கர்'ஸ் சாக்லெட் பருப்பு பாயாசம்’ தயாரித்து அவரது ஆசையினை நிறைவேற்றியுள்ளோம். இந்த சுவையான கலவையான இனிப்பு பதார்த்தத்தை இப்போது சென்னை மக்களும் சுவைக்க முடியும்.

பன்முகத் திறைமை கொண்ட தொலைக்காட்சி என்டர்டெயினரான பாடகி சிவாங்கி கிருஷ்ணகுமார், நாடு முழுவதிலுமுள்ள சிறந்த உணவுகளைப் பற்றி தேடிய நாட்களை நினைவுகூர்கிறார். எனவே, இயல்பாகவே அவரது பெயர் வைக்கப்பட்ட உணவு தயாரிக்கப்பட்டு, அதற்கு அவரது பெயர் வைக்கப்பட்டதைப் பார்த்து வியப்படைந்ததில் ஆச்சரியமில்லை. ‘சிவாங்கி'ஸ் சாக்கோ நட்ஸ்’ - சாக்லெட் மற்றும் நட்ஸ்களின் கலைவயான இது பல்திறமை கொண்ட பிரபலங்களுக்கு ஏற்ற ஒரு இனிப்பு பதார்த்தம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், பாடகர் மற்றும் ராப்பர் அறிவுக்கு இனிப்பு அவல், மாம்பழம், வெல்லம் மிகவும் பிடிக்கும். இவற்றுடன் அவருக்கு மிகவும் பிடித்தமாவை தேன்மிட்டாய், கடலைமிட்டாய் பர்பி, கமர்கட். ராப்பர் ‘அறிவு'ஸ் சாக்லெட் கமர்கட்டு’ என்ற இனிப்பு வகை, சிறந்த பாடலாசிரியரும் பாடகருமான ராப்பர் அறிவுக்கு அற்பணிக்கப்படுகிறது.

இதுகுறித்து சங்கீதா வெஜ் ரெஸ்டாரன்ட் நிர்வாகம் கூறுகையில், "சங்கீதா வெஜ், காட்பரிஸ் இனிய கொண்டாட்டம் பிரச்சாரத்திற்காக மீண்டும் காட்பரி மற்றும் ‘தி இந்து’வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறது.

சங்கீதா ரெஸ்டாரன்ட் எப்போதுமே தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் சிறந்த உணவுகளை வழங்குவதற்கான வழிமுறைகளைத் தேடிவருகிறோம்.

இதன்மூலம், சாக்லெட் சுவையுடன் கூடிய தென்னிந்திய பாரம்பரிய இனிப்பு வகைகளை வழங்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். இந்த பிரச்சாரத்திற்காக நாங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளோம். காட்பரி மற்றும் தி இந்துவுடன் இணைந்த இதுபோன்ற சிறப்பான நிகழ்வுகளை மேலும் எதிர்நோக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

"காட்பரி மற்றும் தி இந்துவுடன் இணைந்து பணியாற்றுவதன் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். உரிமையாளர்களான நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுடன் சிறந்த பிணைப்பினை உருவாக்குவதற்கு புதிய வித்தியாசமான வழிமுறைகளைத் தேடிக்கொண்டே இருப்போம். வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான பிரபலங்களின் பெயர்களில் இனிப்புகளை விற்பனை செய்வதைவிட அவர்களுடன் பிணைப்பினை உருவாக்குவதற்கான சிறந்த வழி எதுவும் இருக்காது. தற்போது வரை கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் ஆண்டுகளிலும் இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பினை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்கிறார் கங்கா ஸ்வீட்ஸ் உரிமையாளரான என். செந்தில் குமார்.

"காட்பரி போன்ற பிரபலமான பிராண்டுடன் ஹாட் பிரெட்டில் இணைந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய மெனு கார்டில், அவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்" என்றார் அட்வான்டேஜ் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடட் இயக்குநர் தருண் மகாதேவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x