Published : 11 Jan 2023 11:21 PM
Last Updated : 11 Jan 2023 11:21 PM

 'இந்து தமிழ் திசை' - சைக்கிள் பிராண்டு அகர்பத்தி வழங்கும் கோலப்போட்டி

திருச்சி.

வீடுகளில் வண்ணக்கோலங்களைப் போடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் 'இந்து தமிழ் திசை' - சைக்கிள் பிராண்டு அகர்பத்தியும் இணைந்து கோலப்போட்டியினை நடத்த உள்ளன.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்போம். இல்லத்தின் அழகு, வாசலில் இடுகிற கோலத்திலேயே தெரிந்துவிடும். கோலம் என்பது மங்கலச் சின்னம். அதை இடுவோர் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள். கோலம் என்பது கலைகளில் ஒன்று. பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிற கலைத்திறனின் எடுத்துக்காட்டு. கோலம் என்பது ஒரு கணிதம். கண் பார்க்க, கை செய்கிற மாயாஜாலம் அப்போது நிகழும்.

கோலம் என்பது அன்பு. வரவேற்கிற அன்பின் வெளிப்பாடு. கோலம் என்பது தர்மம். அரிசியில் இடுகிற கோலமும் அழகு; ‘பசிக்குது’ என்று சொல்ல இயலாத சிற்றுயிர்களுக்கு அது உணவாகிறது. கோலம் என்பது தெய்வத் திருக்கோலத்தின் இன்னொரு திருமுகம். கிரகலட்சுமியாகத் திகழும் பெண்கள், மகாலட்சுமியையும் ஐஸ்வர்யத்தையும் இல்லத்துக்குள் சூட்சுமமாகவும், சந்தோஷமாகவும் வருவதற்காக அழைக்கும் பக்திப் பெருக்காகும்.

அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளைகளில், பனியென்றும் குளிரென்றும் பார்க்காமல் கோலமிடுபவர்கள்தான் பெண்கள். அப்படிக் கோலமிட்டு, தெய்வ சாந்நித்தியத்தை வீட்டுக்குள் அழைத்து, இல்லத்தை மெருகேற்றி, செம்மைப்படுத்துகிறவர்கள்தான் பெண்கள்.

'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்போம். அதேபோல், வாசலுக்கு வாசல் கோலம் என்றும் சொல்லலாம்தானே. எல்லா நாளும் கோலமிடுவார்கள் பெண்கள். நல்ல நாள், திருநாள் என்றால் தெருவையே நிறைக்க வண்ணக் கோலங்களிட்டு, அழகாக்கிவிடுவார்கள். வீதிக்கு விழாக்கோலம் தந்து மனம் நிறைக்கச் செய்துவிடுவார்கள்.

‘கோலம்’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அதற்குள் ஓராயிரம் ஜாலங்களைச் செய்யும் கைகளைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு, உங்களின் கைவண்ணம் காட்டும் போட்டி இது! உங்கள் எண்ணத்தை கைவிரல்களின் வழியே ஓவிய ஜாலம் காட்டினால் போதும். அழகிய கோலத்தை நடுவர் குழு தேர்வு செய்யும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் பரிசு உண்டு. நடுவர் குழு தேர்வு செய்து தருகிற சிறப்பாக வரைந்த பத்து வாசகியருக்கு பரிசுகள் வழங்கப்படும். வண்ணங்கள் கொண்ட கோலப்பொடிகளை நாங்களே தருகிறோம்

அன்றாடம் செய்யும் வேலைதான். ஆனாலும் அத்தனைப் பேருக்கும் நடுவே நடக்கப் போகிறது இந்த கோலப்போட்டி.

’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். ‘தை பிறக்கும் நாளில்’ உங்களுக்கு பரிசும் காத்திருக்கிறது. உங்கள் சகல திறமைகளையும் வெளிப்படுத்துகிற முதல் வாசலாக, முதல் வழியாக, இந்த தை பிறக்கிறது.

போட்டி நடைபெறும் இடம் : திருச்சி ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் வெளிப்பிராகார வீதி.

போட்டி நடைபெறும் நாள் : ஜனவரி 16, திங்கட்கிழமை

நேரம் : மாலை 3 மணி

குறிப்பு : அனைத்து ஊர்களில் இருந்தும் பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் கலந்துகொள்வதற்கு விரும்புபவர்கள் https://www.htamil.org/vannakolangal என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடவே உங்கள் பெயர், முகவரி, மெயில் ஐடி முதலானவற்றையும் அனுப்புங்கள். முதலில் பதிவு செய்யும் 200 பேர் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x