Identifies the innovative women of Tamil Nadu Tanishq in association with 'The Hindu' Group A large number of women participated enthusiastically
Identifies the innovative women of Tamil Nadu Tanishq in association with 'The Hindu' Group A large number of women participated enthusiastically

தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து முன்னெடுப்பு ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Published on

சென்னை.
பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள புதுமைப் பெண்களை உலகத்துக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. பாரதியின் ‘புதுமைப் பெண்’ என்கிற தத்துவத்தில் உத்வேகம் பெற்ற தனிஷ்க், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

‘புதுமைப் பெண்’ தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களைப் இதன்மூலம் வெளிச்சமிட்டுக் காட்டவுள்ளது.

‘தி இந்து’ குழுமத்தோடு இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் தங்களைப் புதுமைப் பெண்ணாக அடையாளப்படுத்த முன்வரும் பெண்களைப் பற்றியோ, தாங்கள் அறிந்த வேறு புதுமைப் பெண்களைப் பற்றியோ பகிர்ந்துகொள்ள தனிஷ்க் அழைக்கிறது. புதுமைப் பெண்களைக் கொண்டாடும்விதமாக அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளது. உங்களின் அனுபவங்கள் தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெறும்.

இத்துடன் உள்ள tanishq.co.in/pudhumai-penn என்ற லிங்க்-இல் தங்களதுஅனுபவ கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது அருகாமையில் உள்ள தனிஷ்க் ஷோரூமுக்கு நேரில் வந்து தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுவரை நூற்றுக்கணக்கான புதுமைப் பெண்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார்கள். நீங்களும் விரைந்து உங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in