சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள்

சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள்
Updated on
1 min read

இந்த தமிழ் புத்தாண்டில் ‘ஓம் சாந்தி’ பூஜை பொருட்களை வாங்கச் செய்வதற்கான புதிய வழியை சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் தனது தயாரிப்பு பொருட்களின் விவரங்களை மின்னணு பட்டியலாக வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது அகர்பத்தி உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பொருட்களை இதில் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த மின்னணு பட்டியல் குறித்து சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவன நிர்வாக இயக்குநர் அர்ஜுன் ரங்கா கூறும்போது, “எங்கள் தயாரிப்புகளின் விற்பனையை நோக்கமாகக் கொண்டுஇத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதில்இடம்பெறும் பாடலின் தமிழ் வரிகள் இயற்கையின் புனிதத் தன்மை, தூய்மையை உயிர்ப்பிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது” என்றார்.

சிறந்த படக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மூலம் இது தயாரிக்கப்பட்டுள்ளது. 18-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான இயற்கை நிலப்பரப்புகள் ‘ஓம்சாந்தி’ பிரார்த்தனை தயாரிப்புபொருட்களைப் பயன்படுத்திநிபுணர்களால் உருவாக்கப்பட்டன. விபூதியால் ஆன மலைத்தொடர்கள், சந்தனம், மஞ்சளால் ஆன ஆற்றுப்படுகைகள், அகர்பத்தியால் செய்யப்பட்ட காடு, குங்கும கிரகம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த புதுமையான டிஜிட்டல் திரைப்படம் ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும். இந்த வீடியோவை https://www.cycle.in/omshanthicatalog என்ற இணையதளத்தில் பார்க்கலாம். l

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in