

சென்னை.
பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீடுகளிலேயே இருக்கும் பிளஸ் 2 படித்த மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வழங்கும் ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்வு நடைபெறவுள்ளது.
வரும் ஜூன் 19 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி, 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில், ஹோட்டல் மேலாண்மை கல்வி பற்றி புகழ்பெற்ற கல்வியாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த இணைய வழி நிகழ்வில் தி ரெசிடன்ஸி ஹோட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத், சமையல் பார்வை பி.வி.டி லிமிடெட் நிறுவனர் டாக்டர் செஃப் செளந்தர்ராஜன், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆண்டனி அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கவுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://bit.ly/3ghbwp7 என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளவும்.
கூடுதல் விவரங்களுக்கு 9840961923 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.