Published : 24 May 2021 15:20 pm

Updated : 24 May 2021 15:24 pm

 

Published : 24 May 2021 03:20 PM
Last Updated : 24 May 2021 03:24 PM

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு! (விளம்பரதாரர் பகுதி)

இரண்டே நாட்களில் 37 மில்லியனுக்கும் அதிகமான பார்வைக் காட்சிகளைப் பெற்றிருக்கிறது

அனைவர் மீதும் தங்களது அன்பையும், மரியாதையையும் வலியுறுத்தும் தயாரிப்பு தரப்பு, இந்த சீரீஸில் அனைத்து தரப்புகளும் சமநிலை சித்தரிப்பை பெறும் என்று வாக்குறுதி அளிக்கிறது


அமேசான் பிரைம் வீடியோ, தி ஃபேமிலி மேன் என்ற அதன் ஒரிஜினல் சீரீஸின் புதிய டிரெய்லரை மே 19 அன்று வெளியிட்டிருக்கிறது. 2019ம் ஆண்டில் வெளியான இதன் சீசன் 1-ற்குப் பிறகு உலகெங்கிலும் இரசிகர்கள் இதன் அடுத்த சீசனுக்காக ஆவலோடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். யூடியூப்-ல் தொடர்ந்து 3 நாட்களாக புதிய சீசனின் டிரெய்லர் #1-ஆக டிரெண்டிங் ஆகும் நிலையில், தி ஃபேமிலி மேனின் புதிய சீசனுக்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள், அவர்களது அன்பையும், நேசத்தையும் அபரிமிதமாக வெளிப்படுத்தியிருப்பது வெளிப்படையாகும். இதற்குள்ளேயே 37 மில்லியன் வியூஸ் என்ற மிகப்பெரிய வரவேற்பை இந்த டிரெய்லர் பெற்றிருக்கிறது. இந்த டிரெய்லருக்கு கிடைத்திருக்கும் மிகப் பிரமாதமான வரவேற்பைப் பார்க்கும்போது இதன் படைப்பாளிகள், அவர்களது முழு திறனை பயன்படுத்தி சுவாரஸ்யமான தொடராக இதனை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது நிச்சயம். பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படவுள்ள இந்த சீசன் பார்வையாளர்களை வியப்பிலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தும் என்பது நிச்சயம். இந்த சீரீஸின் இயக்குநர் இரட்டையர்களான ராஜ் மற்றும் டிகே, இந்த டிரெய்லரின் மாபெரும் வரவேற்பின் பின்னணியில் இத்தொடர் குறித்து மனம் திறந்து உரையாடினர்:

கே. உலகெங்கிலும் இரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிற தி ஃபேமிலி மேன் புதிய சீசன் பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள்?

ராஜ் & டிகே: எங்களது உளப்பூர்வமான ஈடுபாட்டோடு இந்த சீரீஸை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 9-பாகங்களாக வெளிவரும் இந்த துப்பறியும் டிராமா சீரீஸை உருவாக்குவதற்காக பல ஆண்டுகள், குறிப்பாக இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தின்போது செலவிடப்பட்டிருக்கின்றன. அது குறித்து எமது பார்வையாளர்கள் மற்றும் இரசிகர்களோடு பகிர்ந்துகொள்வது எங்களுக்கு உற்சாகமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

ஒரு துப்பறியும் ஏஜென்சிக்காக பணியாற்றும் உலகத்தரத்திலான ஒரு துப்பறிவாளராகவும் அதே வேளையில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த தந்தையாகவும், கணவராகவும் இருப்பதனால் ஶ்ரீகாந்த் திவாரிக்கு (மனோஜ் பாஜ்பேயீ-ன் நடிப்பில்) ஏற்படும் உள்ளார்ந்த மோதலை இந்த சீசனும் மிக நேர்த்தியாக சித்தரிக்கிறது. ஶ்ரீகாந்த் இப்போது எதிர்கொள்கின்ற சவால்கள் இன்னும் அதிக சிக்கலானவையாக இருக்கின்றன; அவரது திறன்மிக்க, அறிவார்ந்த நடவடிக்கைகளும் இன்னும் முன்னேற்றம் அடைவதை இந்த சீரீஸில் காணமுடியும்.
இந்தியாவின் மொழி சார்ந்த மற்றும் கலாச்சாரம் சார்ந்த பன்முகத்தன்மையை இந்த சீசன் உண்மையாக பிரதிபலிக்கிறது மற்றும் சித்தரிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். டிஜிட்டல் தளத்தில் சமந்தா அக்கினேனியின் முதல் நுழைவாகவும் இந்த சீரீஸ் திகழ்கிறது. தைரியமும், வீரமும் மிக்க ஒரு இளம் பெண்ணாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

கே. இந்த சீசனை ரொம்பவும் சிறப்பானதாக எது ஆக்குகிறது?

ராஜ் & டிகே: தி ஃபோமிலி மேன்-ன் புதிய சீசன், இந்தியாவின் வடப்பகுதியையும், தென்பகுதியையும் ஒன்றாக சேர்க்கிறது. சீசன் 1-ல் இடம்பெற்ற அற்புதமான நடிகர்களோடு, தமிழ்நாட்டின் திரைப்பட உலகைச் சேர்ந்த சில பிரபல நடிகர்களும் இந்த புதிய சீசனில் இடம்பெறுகின்றனர். பரபரப்பான ஆக்‌ஷன் நிகழ்வுகள் மற்றும் பாடல்கள் கொண்ட இப்புதிய சீசன், மாறுபட்ட கருத்துகள் மற்றும் சிக்கலான பண்பியல்புகளை, மிக நுட்பமாக நடுநிலையில் நின்று சித்தரிக்கிறது.

மும்பை, தமிழ்நாடு, லண்டன் மற்றும் பிரான்ஸ் என இப்புதிய சீசனின் கதைக்களம் விரிகிறது. இந்த கதையின் நுட்பமான பல அம்சங்களை படைப்பதற்கு இத்துறைகளில் நிபுணத்துவமிக்க பல ஆளுமைகளோடு இணைந்து நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். எமது கதைகளின் வழியாக இந்தியாவின் செழுமையை காட்சிப்படுத்த அனைத்தையும் உள்ளடக்குகின்ற எமது நோக்கத்தையும், செயல்முயற்சிகளையும் உயிரோட்டமுள்ளதாக இந்த சீரீஸ் வழங்குகிறது.

இந்த சீரீஸை உருவாக்குவதற்கு நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப குழுவினரும் வெளிப்படுத்திய பொறுப்புணர்வும், ஆர்வமும் இந்நிகழ்ச்சியை இன்னும் சிறப்பானதாக மாற்றியிருக்கின்றன. பண்பட்ட நடிகரான மனோஜ் பாஜ்பேயீ, ஶ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரமாகவே மாறியிருப்பது அவரது நடிப்புத்திறனை அற்புதமாக வெளிப்படுத்துகிறது. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சமந்தா, அதற்காக பிராந்திய மொழி உச்சரிப்பு வகுப்புகளில் பங்கேற்றதோடு தற்காப்பு கலைகளை வெகு ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு ஒவ்வொரு அதிரடி சண்டை காட்சிகளிலும் அவரே பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஃபேமிலி மேன் புதிய சீசனின் டிரெய்லரை கண்டு இரசியுங்கள்:

கே. உங்களது பிற படைப்புகளைவிட இந்த புதிய சீசன் அதிக சவாலானதாக இருந்ததா?

ராஜ் & டிகே: சீசன் 1-க்கு எங்களுக்கு கிடைத்த அன்பும், பாராட்டும் அபரிமிதமானவை. அதிர்ஷ்டவசமாக அடுத்த சீசனுக்கான திரைக்கதையை நாங்கள் முன்பே முடித்து விட்டதால் சீசன் 1-ஐ நாங்கள் வெளியிடுவதற்கு முன்னதாகவே புதிய சீசனின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்கி விட்டோம். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளால் நாங்கள் திக்குமுக்காடாமல் தவிப்பதிலிருந்து இது எங்களை காப்பாற்றியிருக்கிறது.
எனினும், பார்வையாளர்களின் பின்னறித்தகவல்களை நாங்கள் கவனமாக செவிமடுத்தோம்; இந்த சீரீஸ், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் ஆகியவற்றிற்கு நேர்மையாக இருக்கின்ற அதே நேரத்தில் பார்வையாளர்களின் ஆர்வங்களையும் கவனத்தில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். பரபரப்பான சண்டை காட்சிகளையும், அதிரடி நிகழ்வுகளையும் மிகப்பெரிய அளவிலும், உயர் தரத்திலும் பிரம்மாண்டமாக படம்பிடித்திருப்பதன் மூலம், பார்வையாளர்களின் அனுபவத்தை இன்னும் மேம்படுத்துவதற்கு நாங்கள் முயற்சித்திருக்கிறோம்.

கே. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறித்து அதிக எதிர்பார்ப்பும், உற்சாகமும் உருவாகும் நிலையில், சமந்தாவின் கதாபாத்திரமான ‘ராஜி’ சித்தரிக்கப்பட்டிருக்கும் முறை குறித்து சில ஆட்சேபனை குரல்களும் எழுந்திருக்கின்றனவே; இது அவர்களது உணர்வுகளை காயப்படுத்தாதா?

ராஜ் & டிகே: டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில ஊகங்களும், கருத்துகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எமது நடிகர்கள் குழுவில் பலரும், படைப்பாக்க மற்றும் கதாசிரிய குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் தமிழர்கள். தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். எமது தமிழ் மக்கள் மீது மிக அதிக அன்பும், மரியாதையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த சீரீஸ் உருவாக்கத்திற்காக பல ஆண்டுகள் கடும் உழைப்பை நாங்கள் தந்திருக்கிறோம். இதன் முதல் சீசனில் நாங்கள் செய்ததைப்போலவே எமது பார்வையாளர்களுக்கு சிறப்பான, உணர்வுகளை மதிக்கிற மற்றும் நடுநிலையான கதையை வழங்குவதற்கு மிகப்பெரிய சிரமங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். புதிய சீசன் ஒளிபரப்பாகும்வரை காத்திருக்குமாறும், நிகழ்ச்சியை பார்க்குமாறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். அதை நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் அறிவோம்.

தி ஃபேமிலி மேன் புதிய சீசன், பிரத்யேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் மட்டும் ஒளிபரப்பாகும்.

தி ஃபேமிலி மேன்புதிய சீசன்டிரெய்லர் வெளியீடுஅமேசான் பிரைம் வீடியோஅமேசான்பிரைம் வீடியோAmazon prime videoThe family manNew season trailerடிரெய்லர்TrailerNew seasonவிளம்பரதாரர் பகுதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author