Published : 29 Jul 2020 23:03 pm

Updated : 07 Sep 2020 14:07 pm

 

Published : 29 Jul 2020 11:03 PM
Last Updated : 07 Sep 2020 02:07 PM

நன்றி லலிதாம்மா

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். தள்ளாத வயதிலும் தணியாத ஆர்வத்தோடு சமூக சேவைகளைச் செய்கிறார் லலிதாம்மா. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, தன் வீட்டுப்பெண் போல் நலம் விசாரிக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கவும், பெண்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு கல்வி பெறும் நோக்கோடும் இல்லம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூகப் பணியாளராக லலிதா அம்மாவை, குன்றக்குடி அடிகளார் 1985-இல் ஆதீனமடம் சார்பில் நியமித்தார். அந்தப் பகுதியில் சேரிக்குச் சென்ற முதல் பிராமணப் பெண் இவர்.

குழந்தைகளின் கல்விக்காக நாள்தோறும் நடையாய் நடந்து, அவர்களது பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் அனைத்துத் திட்டங்களும் கிடைத்திட இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கு விதவை உதவித் தொகை, முதியோருக்கு உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவி என அரசு உதவி அனைத்தும் கிடைக்க துணை நிற்கிறார்.

நாள்தோறும் அரசுப் பள்ளி, ஊட்டச்சத்து மையம், சத்துணவுக்கூடம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களுக்குச் செல்கிறார். வகுப்புக்கு வராத மாண வர்களின் பட்டியலைப் பெற்று, அவரவர் வீடுகளுக்குச் சென்று விசாரிக்கிறார். உடல்நலக் குறைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை பெறச் செய்கிறார்.

“இத்தனை வயசிலயும் லலிதாம்மா நடந்தேதான் வருவாங்க. தையல்மிஷின், கிரைண்டர்னு எந்த உதவியா இருந்தாலும் தெரியாதவங்களை அழைச்சிட்டுப்போய் வாங்கித் தருவாங்க...” என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார் குன்றக் குடியைச் சேர்ந்த சொர்ணவல்லி.

உதவி என்று கேட்டால் நண்பர்களே கைவிடுகிற காலத்தில் வீடு வீடாகத் தேடிச் சென்று அவர்களுக்குத் தேவை யான உதவியைச் செய்கிறார். இந்தப் பண்பால்தான் குன்றக்குடி மக்கள் இவரை ‘லலிதாம்மா’ என்று அழைக்கின்றனர்.

“மகாலஷ்மிக்குப் புருஷன் இறந்துட் டாரு. பொண்ணோட கல்யாணத்துக்கு உதவிபெற்றுத்தரச் சொல்லி என்கிட்ட கேட்டுச்சு. திருமணத்துக்கு அரசு தரும் திருமண நிதியுதவி கிடைக்க உதவினேன். 50 ஆயிரம் பணமும் நாலு கிராம் தங்கமும் அந்தப் பெண்ணோட கல்யாணம் சிறப்பா நடக்க உதவுச்சு...” என்று சொல்லும் லலிதாம்மாவின் வார்த்தைகளில் முதுமையை மீறிய உற்சாகம்.

கடந்த 32 ஆண்டுகளாக சமூக சேவையாற்றினாலும் லலிதாம்மா சோர்ந்துபோவதில்லை. கணவரைப் பிரிந்து, மகனை இழந்து, மருமகளோடு வாழ்ந்துவரும் லலிதாம்மவுக்கு சேவை என்பது சுவாசத்தைப் போல.

Dont Forget GoodnessNoble Serviceநன்றி லலிதாம்மாசமூக சேவைSocial workCadbury dairy milkDairy milkCadburySay thank youLalitha ammaThanks lalitha amma

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author