Published : 22 Jul 2020 09:05 PM
Last Updated : 22 Jul 2020 09:05 PM

நன்றி டாக்டர் அசோகன்

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். அப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

ஆட்டோவில் தனது கிளினிக்குக்கு வந்து கொண்டிருக்கும் அந்த மனிதர் சாலையோரம் அமர்ந்து ஊசிமணி விற்றுக் கொண்டிருக்கும் நரிக்குறவர் பெண்ணைப் பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி ’ஏம்மா விஜயா உம் பேத்திக்கு ஜுரம் கொறைஞ்சுடுச்சா? நான் கொடுத்த மருந்தை ஒழுங்கா கொடுத்தியா? என்று கேட்கிறார். “கும்புடறோம் சாமி.

இப்ப அல்லா யிருக்கிதுங்கோ, தோ ஓடுறா பாரு சாமி அவதான்” என்று சிறுமியை சுட்டிக் காட்டி சிரிக்கிறார் விஜயா. இரண்டு நாட்களுக்கு முன் கடுமையான ஜுரத்தில் கண்மூடிக் கிடந்த அந்த குழந்தையை இவரிடம் கொண்டு வந்து காண்பித்திருத்தார்கள். இவரும் ஊசி போட்டு பாரசிட்டமால் சிரப் கொடுத்திருந்தார். அங்கேயே இரண்டு மணி நேரம் வைத்திருந்து ஜுரம் குறைந்ததும் தான் அனுப்பினார். அதற்கு பின் தகவல் ஏதுமில்லை. அதனால் இப்போது பார்த்ததும் நலம் விசாரித்து தெரிந்து கொள்கிறார்.

இப்படி சிதம்பரத்தை சுற்றிலும் வாழும் நரிக்குறவர்கள், பரங்கிப்பேட்டை, கிள்ளை, வேளக்குடி போன்ற ஊர்களில் வாழும் இருளர்கள் என்ற பழங்குடியினர் ஆகியோருக்கும், தெரிவோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கும் இவரதான் கண்கண்ட கடவுள். இவர்கள் எப்போது வந்தாலும் இலவச மருத்துவம் தான். அந்த மக்களில் ஐநூறு நபர்களுக்கும் மேல் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பரிச்சயம்.

ஒருசில மாதங்களுக்கு முன் சிறிய உடல் நலக்குறைவால் அவரால் மூன்று நாட்களுக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. செய்தி அறிந்த அவரிடம் வைத்தியம் பார்க்கும் நோயாளிகள் பழங்கள், ஹார்லிக்ஸ் பாட்டில் என்று வாங்கிக் கொண்டு வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டு மருத்துவரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள்.


நஞ்சமகத்துவாழ்க்கையைச் சேர்ந்த தனலெட்சுமியும் அவர்களில் ஒருவர், அவர நாங்க டாக்டரா பார்க்கறதில்லைங்க. கடவுளாத்தான் பார்ப்போம். எந்த நோயா இருந்தாலும் எந்த நேரமா இருந்தாலும் புள்ளகுட்டிய தூக்கிகிட்டு வந்தா குணப்படுத்திகிட்டு போயிடலாம். அப்படியாபட்ட டாக்டருக்கு உடம்பு சரியில்லன்னா மனசுக்கு எப்படி இருக்கும்?

மருத்துவமனை ஊழியர்களுக்கு தன் வீட்டில் சமைத்த உணவு, நோயாளிகளுக்கு இலவசமாக இஞ்சி டீ, நகருக்கு வந்துவிட்டு இரவில் வீடு திரும்ப முடியாத கிராம மக்களுக்கு மருத்துவமனையில் தங்கிக்கொள்ள அனுமதி என்று தொடர்ந்து மகத்துவங்களை செய்துகொண்டே போகிறது மருத்துவர் அசோகனின் மனது. நடக்கக்கூட இடமில்லாத ஒரு சந்துக்குள் வாடகைக் கட்டிடத்தில் இருக்கும் அந்த மருத்துவமனை எளிய மக்களின் நோயை தீர்க்க காலை 10 மணியிலிருந்து இரவு 11 மணிவரை இடைவிடாமல் இயங்குகிறது. இத்தனைக்கும் தினத்தவணைக்கு பணம் வாங்கித்தான் மருத்துவமனையை நடத்திக் கொண்டிருக்கிறார் மருத்துவர் அசோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x