Published : 28 Oct 2025 07:39 PM
Last Updated : 28 Oct 2025 07:39 PM
சென்னை: கேஏஜி டைல்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு EMI வசதிகள் மற்றும் டிஜிட்டல் ஷாப்பிங் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்தியாவின் முன்னணி டைல்ஸ் நிறுவனமான KAG Tiles, வாடிக்கையாளர்களின் கனவு இல்லங்களை எளிதாகவும் சுமுகமாகவும் உருவாக்கும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, வாடிக்கையாளர்கள் உயர்தர டைல்ஸ் வாங்கும் போது பொருளாதார சுமையின்றி EMI வசதிகள் மற்றும் டிஜிட்டல் ஷாப்பிங் வசதிகளை பயன்படுத்த முடியும்.
EMI மூலம் எளிதான வாங்குதல்
முன்பு ‘Luxury’ என கருதப்பட்ட Vitrified Tiles, Designer Wall Tiles, Imported Finish போன்ற Tiles தற்போது நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கும் எளிதில் கிடைக்கின்றன. குறைந்த ஆவணங்கள் மற்றும் உடனடி அங்கீகாரத்துடன் EMI வசதி வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கேற்ற டைல்ஸை தேர்ந்தெடுத்து கனவு இல்லங்களை நனவாக்க முடிகிறது.
டிஜிட்டல் அனுபவம் – வீட்டிலிருந்தே ஷாப்பிங்
KAG Tiles ஆன்லைன் ஸ்டோர் மூலம் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களையும், கான்ட்ராக்டர்கள், ஆர்கிடெக்ட்களைவும் சென்றடைகிறது. பாதுகாப்பான கட்டண முறைகள், உயர் தெளிவுத்தன்மை கொண்ட தயாரிப்பு படங்கள், EMI வசதிகள் ஆகியவை டைல்ஸ் ஷாப்பிங்கை Gadgets அல்லது Fashionபொருட்கள் வாங்குவது போல எளிமையாக்குகின்றன.
Visualizer Tool – ‘முன்னமே பார்த்து வாங்கும்’ வசதி
வாடிக்கையாளர்கள் தங்கள் ஹால், சமையலறை அல்லது பாத்ரூமில் டைல்ஸ் பொருத்தினால் எப்படி இருக்கும் என்பதை KAG Visualizer Tool மூலம் முன்கூட்டியே பார்வையிட முடிகிறது. இது ஷோரூம் அனுபவத்தை நேரடியாக ஸ்மார்ட்போனில் வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது.
வளர்ச்சிக்கான புதிய பாதை
இந்த முயற்சிகள் குறிப்பாக Tire 2, Tire 3 நகரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக வாடிக்கையாளர் நம்பிக்கை, ஆர்டர்கள், ஷோரூம் நுழைவுகள் ஆகியவை அதிகரித்துள்ளன. டீலர்களுக்கும் பிராண்டிற்கும் வலிமை சேர்த்துள்ளது.
எதிர்கால நோக்கம்
KAG Tiles, விரைவில் AI அடிப்படையிலான பரிந்துரைகள், AR/VR அனுபவங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும், ‘Made in India’ டைல்ஸை உலக சந்தையிலும் பரவச் செய்வதே அடுத்த குறிக்கோள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
“KAG Tiles, வாடிக்கையாளர்களின் கனவுகளை சுமையில்லாமல் நனவாக்கும் நிறுவனம் மட்டுமல்ல; டைல்ஸ் ஷாப்பிங் அனுபவத்தை டிஜிட்டல் யுகத்துக்கேற்றவாறு மறுபரிமாணம் செய்யும் முன்னோடி பிராண்டாக திகழ்கிறது” என நிறுவன அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT