விமானத் துறை குறித்த விநாடி வினா: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்!

விமானத் துறை குறித்த விநாடி வினா: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்!

Published on

சென்னை: ரெமோ இண்டர்நேஷனல் காலேஜ் வழங்கும் 'இந்து தமிழ் திசை' - வானமே எல்லை எனும் விமானத்துறை குறித்த அறிவியல் விநாடி வினா நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL AVIATION ஆகியன இணைந்து வழங்குகின்றன.

பள்ளி மாணவர்களிடையே விமானத்துறை குறித்த ஆர்வத்தையும், அறிவியல் விழிப்புணர்வையும் தூண்டும் வகையில் நடைபெறவுள்ள இந்த அறிவியல் விநாடி வினா நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் அனைவரும் பங்கேற்கலாம். இந்த விநாடி வினா நிகழ்வுக்கான முதல் கட்டப்போட்டி ஆன்லைன் வழியாகவும், இரண்டாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்வுகள் நேரிலும் நடைபெறும்.

இறுதிப்போட்டிக்கு தேர்வான மாணவர்கள் அனைவருக்கும் ஹெலிகாப்டரை அருகில் சென்று பார்ப்பதற்கும், அதில் பறப்பதற்குமான வாய்ப்பு வழங்கப்படும். இந்த விநாடி வினா நிகழ்வின் க்யூஸ் பார்ட்னராக X QUIZ IT இணைந்துள்ளது.


இந்த விநாடி வினா நிகழ்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://www.htamil.org/VE என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QRCode-ஐ ஸ்கேன் செய்து, வரும் 2025 ஜனவரி 15-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in