விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் நிகழ்வு

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் தொடர் நிகழ்வு
Updated on
1 min read

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ - மாணவியர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

இந்த ஆன்லைன் தொடர் நிகழ்வின் முதல் பகுதியாக ‘ஃபேஷன் டிசைன் & டெக்னாலஜி துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், ஃபுட்வியர் டிசைன் & டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்டின் ஃபேஷன் டிசைனிங் துறைத்தலைவர் பேராசிரியர் ஷப்ரின் ஃபர்ஹானா, சென்னை அசோக் லேலண்ட்டின் ஸ்டைலிங் உதவி பொதுமேலாளர் ஏ.தனசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த நிகழ்வை ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

இந்நிகழ்வில் பிளஸ் 2 முடித்தபிறகு படிக்க வேண்டிய படிப்புகளான இன்ஜினீயரிங், பிசிக்கல் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், ஃபுட் சயின்ஸ், ஆங்கில மொழி & இலக்கியம் பாடங்கள் குறித்தும், இவ்வகை பாடங்களைப் படிப்பதனால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. வருங்காலத்தில் தொழில் மற்றும் எதிர்காலத்தை தொழில்நுட்பம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இந்நிகழ்வின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/UUK001 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in