`இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சி: வர்த்தக மையத்தில் நாளை வரை நடைபெறும்

சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சியை , தொகுப்பாளினி தியாமேனன் தொடங்கி வைத்தார் . 
| படம்: எஸ்சத்தியசீலன் |
சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சியை , தொகுப்பாளினி தியாமேனன் தொடங்கி வைத்தார் . | படம்: எஸ்சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சி நேற்று தொடங்கியது. சொந்த வீடு என்னும் லட்சியத்தை அடைய நினைக்கும் வாசகர்களுக்கு உதவும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ஆண்டுதோறும் 2 முறை வீட்டு மனை விற்பனைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ்’ (I ads & events) இணைந்து நடத்தும் சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி தியா மேனன் தொடங்கி வைத்தார்.

அவர் கூறியதாவது:நம் அனைவருக்குமே சொந்த வீட்டில், நமக்கான கனவு இல்லத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. விளம்பரங்களில் தனித்தனியே நாம் அறிந்த பல கட்டுமான நிறுவனங்களை ஒரே இடத்தில் காண்பதே கண்காட்சியின் சிறப்பம்சம். இங்கு நாம் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன்மூலம் எந்தவித குழப்பமுமின்றி தேவையானதை தெளிவாக தேர்ந்தெடுக்க முடியும். ப்ராப்பர்ட்டி வாங்க விரும்புபவர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்திருந்தன. வீட்டு மனை, அடுக்குமாடி வீடுகள், தனி வில்லாக்கள் என பலவிதமான ப்ராப்பர்ட்டிகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தேவைக்கேற்ற ப்ராப்பர்ட்டிகளை வாங்குவது தொடர்பான வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அரசு, தனியார் வங்கிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், வட்டி விகிதம் தொடர்பாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை வங்கி அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும், பால்கனியில் அமர்ந்து தேநீர் அருந்தும் வகையிலான ஃபர்னிச்சர்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்தன. தாய்லாந்து வகை மலர், அலங்கார பொருட்களுக்கான அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இன்றும் (டிச.16), நாளையும் (டிச.17) காலை 10 முதல் இரவு 7.30 மணி வரை கண்காட்சியில் பங்கேற்கலாம். இங்கு வாசகர்கள் வசதிக்காக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சென்னை ப்ராப்பர்ட்டி கண்காட்சியை, தொகுப்பாளினி தியா மேனன் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in