சில்க் மார்க், `இந்து தமிழ் திசை' சார்பில் ‘என்னோட முதல் பட்டு’ நெகிழ்வான நிகழ்வு: முதல் பட்டாடை அனுபவத்தை பகிர பெண்களுக்கு வாய்ப்பு

சில்க் மார்க், `இந்து தமிழ் திசை' சார்பில் ‘என்னோட முதல் பட்டு’ நெகிழ்வான நிகழ்வு: முதல் பட்டாடை அனுபவத்தை பகிர பெண்களுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: முதன்முதலாக பட்டாடை அணிந்துகொண்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் சில்க் மார்க் மற்றும் ‘இந்துதமிழ் திசை’ இணைந்து ‘என்னோடமுதல் பட்டு’ எனும் நெகிழ்வான நிகழ்வை நடத்துகின்றன.

தமிழ் குடும்பங்களின் விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் பெண்கள் மிகவும் விரும்பி பட்டாடைகளை அணிவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. முதன்முதலாக பட்டுப்புடவை அணிந்துகொண்ட அனுபவத்தை எந்தப்பெண்ணாலும் மறக்கவே முடியாது. அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களின் நினைவுகளில் என்றும் படிந்திருக்கும் இனிய அனுபவமாகவே அது இருக்கும்.

உங்களின் முதல் பட்டாடை அணிந்த அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். முதன்முதலில் உங்களுக்குப் பட்டாடையை பரிசளித்தது யார், எந்த தருணத்தில் பரிசளித்தார், முதல் பட்டாடையை அணிந்துகொள்ள உங்களுக்கு உதவியவர் யார் என்ற விவரங்களுடன், அன்றைய நாள் நினைவுகளைக் குறிப்பிட்டு, அந்தப் பட்டாடையை அணிந்திருக்கும் புகைப்படத்துடன் எங்களுக்கு அனுப்புங்கள்.

200 முதல் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, https://www.htamil.org/EMP என்ற லிங்க்-ல் க்ளிக் செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் எழுதி அனுப்பும் அனுபவங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறப்பான அனுபவங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன. தங்கள் அனுபவங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உற்சாகமாய் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in