Last Updated : 02 Nov, 2023 01:16 PM

 

Published : 02 Nov 2023 01:16 PM
Last Updated : 02 Nov 2023 01:16 PM

ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும்  ‘சீர்மிகு பொறியாளர் விருது - 2023’ வரும் நவ.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: கட்டுமானத்திலும் கட்டமைப்பிலும் சிறப்பான முறையில் தனித்துவத்துடன் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சீர்மிகு பொறியாளர்-2023’ விருதுகளை வழங்கவுள்ளது. இந்நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

பொதுவாகக் கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் பெரும் நிறுவனங்களைச் சார்ந்த ஒன்றாகவே கருதப்படுகின்றன. இருப்பினும், அவை ஏதோ ஒரு பொறியாளரின் கனவில் / திறனில் உருவானவை என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்தப் பொறியாளர்கள் தங்கள் தனித்துவத்தைக் கட்டுமானத்தையும் கட்டமைப்பையும் வடிவமைப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. அவற்றின் உறுதியிலும், பேரிடர்களைத் தாங்கி நிற்கும் திறனிலும், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த
முன்னெடுப்புகளிலும் தங்கள் தனித்துவத்தை அவர்கள் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றனர்.

அவர்களில் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்கள். அறியப்படாத பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத்
தேர்வுசெய்து, அவர்களுக்கு சென்ற ஆண்டு ‘சீர்மிகு பொறியாளர்-2022’ எனும் விருதினை ராம்கோ சூப்பர்கிரீட் சிமெண்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கியதைப் போலவே, இந்த ஆண்டும் வழங்கவுள்ளது.

5 பிரிவுகளின்கீழ் விருதுகள்:

1.புதுமை: புதுமையான நுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த கட்டமைப்பு, நெடுஞ்சாலை, பாலம், எஃகு கட்டமைப்பு போன்றவற்றை நிர்மாணிப்பதில் சிறந்து விளங்குதல்.
(Innovation: Outstanding Structure Award for using Innovative Techniques , Innovative Pre-casting / Erection Technique, Best use of
formwork. Excellence Award in Construction of High Rise Building, Highway, Bridge, Industrial Structure, Steel Structure...etc. Excellence Award in usage of New / Sustainable materials)

2. தொழில்நுட்ப தலையீடு: சிறந்த கான்கிரீட், கட்டுமானம், புதுமையான முறையில் வீடுகளை உயர்த்துதல், பொருட்கள் மற்றும் அமைப்புகளின் பயன்பாட்டினைக் கொண்டிருத்தல்.
(Technology Intervention: Outstanding Structure Award in Concrete / Masonry / Steel structure; Innovative Lifting / Launching Technology Award; Awards for Effective Use of Materials and Systems; Disaster Management Award)

3. சுற்றுச்சூழலுக்கு உகந்தது: சிறந்த பழுதுபார்ப்பு மற்றும் கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு, நிலையான அல்லது பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துதல்.
(Environment Friendly: Awards for Outstanding Repair and Rehabilitation of structures; Green Technologies and Materials Awards; Awards for Climate Resistant (Change))

4. தொழில்முனைவு: கட்டுமானத் துறையில் தொடக்க தொழில்முனைவோராகவும், சிறந்த இளம் பொறியாளராகவும் இருத்தல்.
(Entrepreneurship: Awards for Startup Entrepreneur in Construction Sector, Outstanding Young Engineer Award)

5.சிறந்த ஆய்வுக் கட்டுரை: சிவில் / ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
(Research: Awards for Outstanding Research Paper in Civil/Structural Engineering - Industrial / Societal Relevance) ஆகிய 5 பிரிவுகளின்கீழ் பல்வேறு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அனைத்துப் பிரிவுகளிலும் வழங்கப்படும் விருதுகளுக்கு பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக கருதப்படும்.

இவ்விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்திற்குத் தலைமை வகித்த
தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.

இத்துறையின் முன்னோடிகளான அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை மேனாள் பேராசிரியர், தலைவர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், சென்னை சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்பு பிரிவு தலைவர், பேராசிரியர் டாக்டர் கே.பி.ஜெயா, சென்னை ஐடிபிஎல், எல்&டி-யின் சாலைகள் மற்றும் பாலங்கள் தலைமை வடிவமைப்பாளர் ரவீந்தர சுப்பையா ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்ய இருக்கிறார்கள்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் பொறியாளர்களே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து https://www.htamil.org/Engineersaward2023 என்ற லிங்கில் அல்லது QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, வரும் 2023 நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x