

சென்னை.
பச்சையப்பாஸ் சில்க்ஸ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கொலு கொண்டாட்டத்தை நடத்துகிறது. இக்கொலு கொண்டாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க உங்கள் வீடுகளில் வைக்கும் கொலு படங்களை அனுப்ப வேண்டும். சிறந்த கொலு படங்களை அனுப்புவோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நம் வீடுகளில் மகிழ்ச்சி எனும் உற்சாகத்தை தருகிற கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நம் வீடுகளில் வைக்கவுள்ள கொலு கண்காட்சியை படமாக எடுத்து அனுப்ப வேண்டும். உங்கள் வீடுகளில் வைத்த கொலு படங்களை அனுப்பும்போது உங்கள் பெயர், முகவரியையும் சேர்த்து kk@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 20-ம் தேதிக்குள் அனுப்பவும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கொலு கொண்டாட்ட படங்களை அனுப்பி வையுங்கள். சிறந்த கொலு படங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியாகும். மேலும், சிறந்த கொலு படங்களை அனுப்பியவர்களை அழைத்து, சென்னை பச்சையப்பாஸ் சில்க் ஷோரூமில் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.