Published : 04 Oct 2017 09:45 AM
Last Updated : 04 Oct 2017 09:45 AM

‘தி இந்து - யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ‘தாயே தமிழே’ பாடலை 27 லட்சம் பேர் ரசித்தனர்: சமூக வலைதளங்களில் வைரலாகிறது

மது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-வது ஆண்டு கொண்டாட்டமாக ‘யாதும் தமிழே’ என்ற நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் கவிஞர் மதன் கார்க்கியின் வரிகளில் ‘தாயே தமிழே வணங்குகிறோம்... உன் பாதம் தொட்டே தொடங்குகிறோம்’ என்ற தமிழ் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது. மேட்லீ ப்ளூஸ் குழுவின் ஹரீஷ் மற்றும் பிரஷாந்த் இசையில், சையத், காவியா, சத்யபிரகாஷ் பாடிய இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைர லாகி வருகிறது.

‘தாயே தமிழே’ பாடல் வெளியான முதல் 10 நாட்களில் 27 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 16,332 பகிர்வுகள், 35,500 லைக்ஸ் என்று இணையத்தில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த பாடல்:

தாயே தமிழே வணங்குகிறோம் - உன்

பாதம் தொட்டே தொடங்குகிறோம்!

மூச்சில் பேச்சில் பாயுங் குருதியில்

உன்னை உன்னை உணருகிறோம்

வள்ளுவன் தந்தாய் அவ்வைகள் தந்தாய்

உலகுக்கு உன்னை பரிசளித்தாய்!

கம்பன் தந்தாய் பாரதி தந்தாய்

எத்தனை எத்தனை மொழிகள் நீ செய்தாய் (தாயே…)

இலக்கியம் மட்டும் செல்வம் என்றால்

உலகின் அரசி நீயே!

வாழ்வை புதுக் கவிதை செதுக்க

இலக்கணம் தந்தாய் தாயே! (தாயே…)

வேற்று மொழிகளை மதிப்போம்

உன்னை மட்டுமே துதிப்போம்

இனி வரப்போகும் தலைமுறைக்கெல்லாம்

உனையே நெஞ்சில் விதைப்போம்! (தாயே…)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x