திருப்பூரில் நாளை மறுநாள் இந்து தமிழ் திசை – இந்துஸ்தான் இணைந்து நடத்தும் வந்தார்க்கும் வாழ்வு உண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த பகிர்வரங்கு

திருப்பூரில் நாளை மறுநாள் இந்து தமிழ் திசை – இந்துஸ்தான் இணைந்து நடத்தும் வந்தார்க்கும் வாழ்வு உண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த பகிர்வரங்கு
Updated on
1 min read

திருப்பூர்: ‘இந்து தமிழ் திசை’ – ‘இந்துஸ்தான்’ நாளிதழ்கள் இணைந்து நடத்தும் ‘வந்தார்க்கும் வாழ்வு உண்டு’ புலம்பெயர் தொழிலாளர்களின் இருப்பும் பாதுகாப்பும் குறித்த பகிர்வரங்கம் நாளை மறுநாள் மாலை திருப்பூரில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வட மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக வருகை தந்து, பாதுகாப்பாகவும் நலமுடனும் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யாகப் பரப்பப்பட்ட செய்தி, தேவையற்ற பதட்டமான சூழலை உருவாக்கியது.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுலகுக்கு உணர்த்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ – ‘இந்துஸ்தான்’ நாளிதழ்கள் இணைந்து ‘வந்தார்க்கும் வாழ்வு உண்டு’ எனும் புலம்பெயர் வடமாநிலத் தொழிலாளர்களின் இருப்பும் பாதுகாப்பும் குறித்த பகிர்வரங்கை நடத்து கின்றன. இந்த பகிர்வரங்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 30, ஞாயிற்றுக் கிழமை) மாலை 4.30 மணிக்கு, திருப்பூர் கருவம்பாளையம் நடராஜா தியேட்டர் சாலையிலுள்ள திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நடைபெறுகிறது.

இந்த பகிர்வரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், கூடுதல் சார்பு நீதிபதி எம்.மேகலா மைதிலி, திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆர். கே.சிவ சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பங்கேற்று, தமிழகத்தில் தங்களது பாதுகாப்பான இருப்பைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in