Published : 14 Dec 2016 10:13 AM
Last Updated : 14 Dec 2016 10:13 AM

இணையகளம்: சின்னம்மா ஸ்டிக்கர்

மனுஷ்யபுத்திரன்

ராம்குமார் மாதிரி ஒரு மாடு மேய்க்கிற பையனின் மரணம் தொடங்கி, ஒரு மாநில முதல்வரின் மரணம் வரை எந்தச் சந்தேகத்துக்கும் பதில் கிடைக்காது எனில், நான் மீண்டும் கேட்கிறேன்... நாம் என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?

பாலை கார்த்திக்

சின்னம்மா ஸ்டிக்கர்கள் தயார் நிலையில் உள்ளனவா?

ஆர் எஸ் கதிர்

அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா வருவதுதானே முறை? தம்பித்துரை # அப்படிப் பார்த்தால், அண்ணாதுரைக்குப் பிறகு நீங்கல்ல வந்திருக்கணும்?

பி கருணாகரன்

சசிகலா நாலெழுத்து.. அதிமுக நாலெழுத்து.. அடடே!

அடுத்து என்னடா புரொபைல் பிக்சர்? பன்னீர் செல்வம் பாஸ். ரைட்டு. சூதானமா வாழணும்டா தம்பி!

மணிகண்டன் மா.பா

சின்னம்மா சசிகலா அவர்களே..

சித்தப்பா நடராஜன் அவர்களே..

மாப்பிள்ளை தினகரன் அவர்களே..

தம்பி சுதாகரன் அவர்களே..

உங்களின் பொற்பாதம் தொட்டு...

சின்னம்மா

அப்படியே சின்னம்மா பத்தி ஒரு பாட்டு படிச்சுவிடுங்க லொடுக்கு பாண்டி..

கண்ணன்

ஜெயலலிதாவின் உடல்நிலை மெதுவாகவே மோசம் அடைந்துவந்தது. இதை உணராத அளவு அவர் முட்டாள் இல்லை. யாரையும் வாரிசாக எம்ஜிஆர் அறிவிக்கவில்லை; தானும் அறிவிக்கும் எண்ணமில்லை என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு நேர்காணலில் அவர் தெளிவுபடுத்திவிட்டார். அறிவிக்காமல் இருந்தால் இப்போது நடப்பதுதான் நடக்கும் என்பது ஊகிக்க முடியாதது அல்ல. ஒன்று, இதையே அவர் விரும்பினார் அல்லது தனக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதுபற்றி அவருக்கு அக்கறையில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளைவிட, சசிகலாவுக்குக் கூடுதல் அரசியல் அனுபவம் உண்டு, கட்சியில் பிடி உண்டு. கட்சிக்கு அது விரும்பும் பாதையில் சென்று தாக்குப்பிடிக்கவோ அழிந்துபோகவோ உரிமை உண்டு. அழிந்தால் அரசியலில் புதியன புகட்டும். தமிழ் மக்களுக்குப் பெரிய இழப்பு எதுவும் இல்லை.

வேல்குமார்

‘‘அதிமுகவை வழிநடத்த தலைமைப் பொறுப்பேற்க வேண்டும்’’ - சின்னம்மாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள்!

கருப்பு கருணா

புரட்சித் தலைவரைப் பார்த்தாச்சி..

புரட்சித் தலைவியைப் பார்த்தாச்சி..

புரட்சித் தோழியையும் பார்த்தாச்சி..

என்ன.. புரட்சியைத்தான் பார்க்க முடியலை!

எல் ராய்

ஒரு பிழை.. ஒரே ஒரு பிழைதான் நடந்தது; மத்தியிலும் மாநிலத்திலும். அது - தமிழக மக்கள் தனிப்பெரும்பான்மையுடன், மெஜாரிட்டியுடன் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியது. இந்திய மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது. மிச்ச காலம் எப்படி போகுமோ..?

அப்துல் வஹாப்

சின்னம்மா உணவகம்..

சின்னம்மா மருந்தகம்..

சின்னம்மா சிமெண்ட்..

சின்னம்மா திரையரங்கம்..

சின்னம்மா குடிநீர்...

இன்னும் எதையெல்லாம் தமிழ்நாடு பார்க்கணுமோ!

ஓவியர் அரஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x