Published : 20 Jan 2023 03:03 PM
Last Updated : 20 Jan 2023 03:03 PM

கொரிய தமிழ்ச் சங்கம் | தலைவர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவினர் போட்டியின்றி தேர்வு

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள்

கொரியா: கொரிய தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர் ராமசுந்தரம் உள்ளிட்ட ஆளுமைக் குழுவின் பொறுப்புக் காலம் நிறைவடைந்ததையொட்டி, சங்கத்திற்கு புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக் குழுவினர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பொறுப்புக்குழுவின் தலைவர் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கொரிய தமிழ்ச்சங்கத்தின் தேர்தல் பொறுப்புக்குழுவின் தலைவரும், அறிவுரைக்குழுவின் உறுப்பினருமான இரா.அச்சுதன் வெளியிட்டுள்ள தகவலில்,
"கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு, அமைக்கப்பட்டது கொரிய தமிழ்ச் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சங்கத்தின் சட்ட திட்டப்படி தேர்ந்தெடுக்கக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்குவின் பொறுப்புக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். தமிழ்ச் சமுகத்தில் புதிய தலைமைகள் உருவாவதை ஊக்குவிக்கும்வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் ஒருமுறை மட்டுமே பொறுப்பு வகிப்பது என்கிற மரபை கொரிய தமிழ்ச் சங்கம் பின்பற்றிவருகிறது.

அவ்வகையில் முனைவர் ராமசுந்தரம் தலைமையிலான முதல் ஆளுமைக்குழுவின் பொறுப்புக்காலம் (மார்ச் 2020 - மார்ச் 2023) நிறைவுபெறுவதால், புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்குழுவினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் கடந்த 2022 நவம்பர்-டிசம்பர் காலத்தில் நடைபெற்றது. சங்கத்தின் அறிவுரைக்குழுவின் உறுப்பினர்-பிரதிநிதி பேராசிரியர் இரா. அச்சுதன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

காணொளி மூலம் இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், உரிய அலுவலக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்குழுவினர் உரிய தேர்தல் நடைமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சங்கத்தின் புதிய தலைவராக, திருச்சி மாவட்டம், பெருவள்ளப்பூரைச்சேர்ந்த முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தைச்சேர்ந்த பீட்டர் சகாய டார்சியூஸ், செயலாளராகவும், சிவகங்கை மாவட்டம், மாங்குடியைச்சேர்ந்த முனைவர் நல்லாள் முத்துசாமி பொருளாளராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், சங்கத்தின் துணைத் தலைவராக விஜயலட்சுமியும், பொதுச் செயல்பாடுகளுக்கான செயலாளராக சரவணனும், இணைப் பொருளாளராக ஜெரோம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இணைப்பொருளாளர் தகவல் தொடர்பு செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான ஆளுமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x