Published : 31 Dec 2016 10:39 AM
Last Updated : 31 Dec 2016 10:39 AM

வாட்ஸப் வறுவல்: ஜெயோ டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயோ டிவி புத்தாண்டு நிகழ்ச்சிகள் விவரம்:

காலை 6 மணிக்கு:

சின்னம்மா அருளிருக்கும்... வேதா இல்லத்தில் சிறப்பு வழிபாடு.

7 மணிக்கு:

‘சந்தியா அம்மாவுக் குப் பிறகு, அம்மாவுக்கு அன்னையாக திகழ்ந்தவர் என்பதால்தான் அவரை சின்னம்மா என்று அழைக்கிறோம்’ - உஷார் கே.சாமியின் சிறப்பு பேட்டி.

8 மணிக்கு:

தமிழ் புத்தாண்டு சிறப்பு ராசி பலன் - ‘சின்னம்மா முன்னால் இனி குனிந்து நடக்கலாமா, தவழ்ந்து நடக்க வேண்டுமா?’ சின்னம்மாவின் ஆசிபெற்ற ஜோதிடர் வழங்கும் சிறப்புப் பரிகாரங்கள்.

9 மணிக்கு:

சின்னம்மாவைப் புகழ்ந்து கங்கை அமரனின் இன்னிசைக் கச்சேரி.

10 மணிக்கு:

திராவிடக் கொள்கைகளின் ஆணிவேர் அம்மாவா? சின்னம்மாவா? குண்டு கல்யாணம் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம்.

மதியம் 12 மணிக்கு:

75 கோடி எப்படி.. எப்படி? ராமமோகன ராவ் வழங்கும் சுவாரஸ்யமான பெட்டி.. ஸாரி, பேட்டி!

1 மணிக்கு:

அம்மா எத்தனை இட்லி சாப்பிட்டார்? சின் னம்மா கூடவே இருந்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி தனது நினைவலை களைப் பகிர்ந்துகொள்கிறார் .

மாலை 5 மணிக்கு:

சிறப்பாக கும்பிடு போடுவது எப்படி? கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் குனிந்தபடி பின்னோக்கி நடக்கும் வித்தியாசமான விளையாட்டுப் போட்டிகள்.

6 மணிக்கு:

‘சிவபெருமான் என் கனவில் வந்து சின்னம்மாதான் அடுத்த முதல்வர் என்று சொன்னார்’ - மதுரை ஆதீனம் வழங்கும் பக்திமணம் கமழும் ஆன்மிக அதிரடி பேட்டி.

இரவு 7 மணிக்கு:

தந்தை பெரியாருடன் சின்னம்மா இணைந்து சமூகநீதிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் பாடுபட்டதை பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார் வீரமணி.

8 மணிக்கு:

சின்னம்மா முதல் முறையாக நமக்காக தனது காந்தக் குரலில் அளிக்கும் சிறப்பு பேட்டி.

9 மணிக்கு:

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ‘சின்னத்தாய்’ சிறப்புத் திரைப்படம்.

காண முடிந்தால் காணத் தவறாதீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x