ஜெ.நினைவலைகள்: கோமளவல்லி, ஜெயலலிதா ஆனது எப்படி?

ஜெ.நினைவலைகள்: கோமளவல்லி, ஜெயலலிதா ஆனது எப்படி?
Updated on
1 min read

ஜெயலலிதாவின் தாய்வழிப் பாட்டனார் திருச்சி மாவட்டம், ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்த ரங்கசாமி ஐயங்கார் என்ற ஸ்ரீ வைஷ்ணவர். சில காலம் பொறியாளராகப் பல்வேறு ஊர்களில் பணியாற்றிய அவர் இறுதியாக மைசூர் மாநிலத்தின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு மூன்று பெண்கள். அம்புஜவல்லி, வேதவல்லி, பத்மவல்லி மற்றும் ஒரு மகன் என்று நான்கு குழந்தைகள். அவர்களில் வேதவல்லி இரண்டாவது மகள்.

ஜெயலலிதாவின் தந்தை வழி பாட்டனார் நரசிம்மன் ரங்காசாரி. மருத்துவர். அவரும் மைசூரு மகாராஜாவின் அரண்மனையில் பணிபுரிவதற்காக அவ்வூருக்குக் குடிபெயர்ந்தார். நரசிம்மனின் மகன்தான் ஜெயராமன். வேதவல்லி, ஜெயராமனுக்கு இரண்டாவது மனைவியாக மணம் செய்துவைக்கப்பட்டார். அத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். ஜெயகுமார், கோமளவல்லி.

மாண்டியா மாவட்டத்தின் மேல்கோட்டை நகரில் 1948 பிப்ரவரி 24-ல் கோமளவல்லி பிறந்தார். மைசூரு நகரில் இரு தாத்தாக்களின் வீட்டிலும் அவர் மாறி மாறி வளர்ந்தார். அவை ஜெய விலாஸ் என்றும் லலித விலாஸ் என்றும் அழைக்கப்பட்டன. கோமளவல்லிக்கும் ஜெயலலிதா என்று பெயர் சூட்டப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in