Last Updated : 11 Nov, 2016 10:44 AM

 

Published : 11 Nov 2016 10:44 AM
Last Updated : 11 Nov 2016 10:44 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 14: மெட்றாஸில் குடியேறிய யூதர்கள்!

மும்பையில் இஸ்ரேல் நாட்டின் துணைத் தூதராகப் பொறுப் பேற்ற டோவ் செகிவ் ஸ்டெயின் பர்க், மெட்றாஸுக்கு முதல் முறையாக வந்தபோதுதான் இந்த நகரிலும் யூதர்கள் குடியிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அன்றைக்கு விருந்தினர்களை வரவேற்ற ரோச்சேல் ஷா குடும்பத்தவர் மட்டுமே இங்கு யூதர்கள் என்று நினைத்திருந்தேன். கெர்ஷன் ஜோஷுவா அவரது மனைவி எலிசபெத், அவர்களுடைய 2 பெண்கள் கலந்துகொண்டனர். கெர்ஷனின் தந்தை இத்தனை ஆண்டுகளாக மெட்றாஸைத் தனது சொந்த ஊராக வரித்து வாழ்ந் தார். அத்துடன் யூதர்களின் கல்லறை களையும் பராமரித்து வந்திருக்கிறார். ஜோஷுவாக்களின் குடும்பங்கள் மெட்றாஸ் யூதர் குடும்பங்களுக்கும் முன்னர் குடியேறியிருக்கின்றன.

அவர் களுடைய நூறாண்டுக் கால வரலாறு இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி யாராலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. கெர்ஷன், கேரளத்தின் கொச்சிப் பகுதியில் இருந்து வந்தவர்; அவருடைய மனைவி எலிசபெத்தோ கொங்கணப் பகுதியைச் சேர்ந்தவர். அலிபாக் என்ற இடத்தில் எலிசபெத் ஆப்ரஹாம் அவஸ்காரின் பூர்விக வீடு அருகில் யூதர்களின் பழமையான ஆலயம் (சினகாக்) இருக்கிறது. கொச்சி யைச் சேர்ந்த யூதர்களும் சமகாலத்தில் வந்தவர்கள் அல்ல; அவர்களும் வெவ் வேறு இரண்டு காலகட்டத்தில் மேற்குக் கடற்கரைக்கு வந்தவர்களே. கிறிஸ்து வின் காலத்துக்கு முன்னர் அரபு வாணிகர் களின் கடல் பயணங்களைப் பின்பற்றி இந்தியாவுக்கு வந்தனர்; அடுத்த குழுவினர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர்.

200 ஆண்டுகளுக்கு முன்னதாக பாக்தாதைச் சேர்ந்த யூதர்கள் சாசூன்கள் என்று அழைக்கப்படுவோர் மூன்றாவது தொகுப்பாக மும்பை மாநகருக்கு வந்து சேர்ந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த யூதர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30,000. இஸ்ரேல் என்ற நாடு உதயமானவுடன் ஏராளமானோர் அங்கு சென்றனர்.

இப்போது மும்பை தாணே இடை யில் சுமார் 4,000 யூதர்கள் வசிக்கின்றனர். கொங்கணக் கடற்கரையிலும் குஜராத் கடற்கரைப் பகுதியிலும் சுமார் 1,000 பேர் வசிக்கின்றனர். கேரளத்திலும் பிற மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக 5,000-க்கும் குறைவானவர்களே வாழ் கின்றனர். இவர்கள் எல்லோருக்கும் பின்னால் வந்தவர்கள்தான் மெட்றாஸ் யூதர்கள். இவர்கள் கி.பி. 1,680 முதல் 1,780 வரையில் வாழ்ந்தனர். போர்த்துக் கீசிய நாடுகளில் இருந்து வந்த அவர்கள் வைரம், பவழம் போன்றவற்றை விற்கும் கடைகளை வைத்திருந்தனர்.

அவர்களு டைய கடைகள் இருந்த அந்த வீதியே ஜார்ஜ் டவுனில் பவழக்காரத் தெரு என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் கோரல் மெர்ச்செண்ட் ஸ்ட்ரீட் என்று அழைத்தனர். முத்தியால் பேட்டை என்றும் அந்தப் பகுதி அழைக்கப்பட்டது. அவர்கள் லண்டன், ஆன்ட்வெர்ப் நகர வைர வியாபாரிகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். கோல் கொண்டாவின் செல்வங்களை ஏற்றுமதி செய்தனர். பதிலுக்கு வைரம், பவழம், வெள்ளியை இறக்குமதி செய்தனர்.

ஜோஷுவாக்கள் வெவ்வேறு வியா பாரங்களில் ஈடுபட்டனர். அவர்களுடைய குடும்பத்தின் முதல் உறுப்பினர் 1960-களில் மெட்றாஸுக்கு வந்தார். ரோலிங் ஷட்டர் என்று அழைக்கப்படும் இரும்புக சுருள் கதவுகளைத் தயாரித்து விற்கும் தொழிலைச் செய்தார். அவரது குடும்பம் அந்தத் தொழிலை அப்படியே தொடர்ந்தது.

கடவுள் தந்த சிறு நிலம்!

மெட்றாஸ் லாயிட்ஸ் சாலையில் உள்ள பொது இடுகாட்டில் யூதர்களுக்கு என்று ஒதுக்கியிருக்கும் இடம் ஒரு ஏக்கருக்கும் குறைவு. சரியாகச் சொல்வதென்றால் ஒரு கிரவுண்ட் தான். பக்கத்து பக்கத்து இடங்கள் சீனர்கள், பஹாய் பிரிவினருக்கானது. வெகு சிலருக்குத்தான் இங்கு இவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியும். 1997 வரை இந்த இடம் மிகவும் மோச மாக இருந்தது. ஐலின் ஜோஷுவாவை அங்கே அடக்கம் செய்ய வந்தபோதுதான் அந்த அவலத்தை ஜோஷுவா குடும்பம் பார்த்து வருந்தியது. பிறகு மெட்றாஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அந்த இடம் பொலிவு பெற்றது.

ஆனால் மெட்றாஸ் நகர யூதர் களுக்கான அடக்க ஸ்தலம் இதுவல்ல; பெத்தநாயக்கன்பேட்டையில் தங்க சாலையின் தெற்குப் பகுதியில்தான் அது இருந்தது. அங்கே ஜேக்கஸ் டி பைவியா (முதல் வைர வியாபாரி), ஐசக் சார்டோ (1709), சாலமன் பிராங்கோ (1763), எலிசபெத் கோஹன் (1964) ஆகியோருடைய கல்லறைகள் இருந்தன. 1983-ல் அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டும்போது ஜேம்ஸ் பைவியா என்பவரின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுவிட்டது. எஞ்சிய மூன்றும் லாயிட்ஸ் சாலை கல்லறை வளாகத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மெட்றாஸ் நகரில் வசித்த யூதர்களுக்கு பைவியா தலைவராக இருந்திருக்கிறார். அவருக்கு கோட்டைக்குள்ளும் வெளி யேயும் சொத்துகள் இருந்துள்ளன. 1687-ல் அவர் இறந்த பிறகு அவரு டைய மனைவி அவருடைய வைர வியா பாரத்தைத் தொடர்ந்தார். அப்போது கவர்னராக இருந்த யேல் என்பவருடன் அவர் வீட்டிலேயே ‘வசிக்க’த் தொடங்கினார். கவர்னர் யேல் ஈட்டிய அபரிமிதமான சொத்துகள் வைர வியாபாரம் மூலம் கிடைத்தவை அல்ல!

இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் கப்பலில், ஹெய்ரோனிமா டி பைவியா இறந்தார். நன்னம்பிக்கை முனையில் அவர் புதைக்கப்பட்டார். எலிஹு யேல் மெட்றாஸில் மட்டுமல்ல இங்கிலாந்து திரும்பிய பிறகும் நீண்ட காலம் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிஞர்கள் எழுதியுள்ளனர். அவருடைய அரசி யல், நிர்வாகப் பங்களிப்பை மட்டும் எழுதாமல் ‘எல்லா விவகாரங் களையும்’ எழுதியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஏசு வாழ்ந்த இடத்தில் தமிழ்!

விடுமுறையில் இஸ்ரேல் சென்று வந்த வாசகர் வி.எம். செரியன் ஒரு சுவையான தகவலைக் குறிப்பிடுகிறார். கடவுளிடத்தில் எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று ஏசு நாதர் தன் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த இடத்தில் எல்லா மொழிகளிலும் அந்த ஜெபத்தை எழுத்தில் பதித்திருக்கிறார்கள். தமி ழிலும் பளிங்குக் கல்லில் அதைப் பொறித்திருக்கிறார்கள். அங்கே தமிழ் என்பதை ஆங்கிலத்தில் ‘Tamoul’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பிரெஞ்சுக் காரர்கள் தமிழை அப்படித்தான் ஆங்கிலத்தில் எழுதுவார்கள். அப்படி யானால் அங்கே தமிழில் எழுதியவர் பிரெஞ்சுக்காரரா?

- சரித்திரம் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x