பரிந்துரை 5 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

பரிந்துரை 5 - கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
Updated on
1 min read

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு
ராமச்சந்திர குஹா
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
ரூ : 250/-
எதிர் வெளியீடு: 9865005084

சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் அடிப்படையில், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய நூலின் தமிழாக்கம் இது. சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுத் திட்டங்களால் தமது நிலங்களை இழக்கும் பழங்குடியினர், விவசாயிகளின் நிலை என்று பல பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் குஹா.

ஏ.கே.செட்டியார் படைப்புகள்
அறியப்படாத அரிய கட்டுரைகளின் முழுத் தொகுதி
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
சந்தியா பதிப்பகம் - தொடர்புக்கு: 044-24896979
விலை: ரூ.900

ஏ.கே.செட்டியாரின் படைப்புகள் முழுவதுமாகத் தொகுக்கப்பட்டு இரு தொகுதிகளாக வெளியாகியிருக்கின்றன. அவர் எழுதி இதுவரை நூல் வடிவம் பெறாத 30 கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.

உலக மக்கள் வரலாறு
ஹரிஸ் ஹார்மன்
தமிழில்: மு.வசந்தகுமார், நிழல்வண்ணன்
விலை: ரூ.1,100
விடியல் பதிப்பகம் - தொடர்புக்கு: 9789457941

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக் குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம்
மா.பா.குருசாமி
விலை: ரூ. 300
சர்வோதய இலக்கியப் பண்ணை: 0452- 2341746

காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் என்று கருதப்படும் ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இது. ஜே.சி.குமரப்பாவின் வாழ்க்கை வரலாறு, பரவல்முறை உற்பத்தி, விநியோகம், குடிசைத் தொழிகள் பற்றிய அவரது பார்வை என்று பல விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in