

கதை மழை
பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம் - 9486177208
விலை: ரூ.80
உலகச் சிறுகதைகளுடன் ஒப்பிடும் வகையில் தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன என்று குறிப்பிடும் பிரபஞ்சன், தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகளும் பேசியிருப்பதன் அடிப்படையில் இரண்டையும் இணைத்து எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது.
இஸ்லாம்: ஒரு பார்வை
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது
விலை: ரூ.120
கிழக்குப் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 - 42009603
இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு என்ன? இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதமா? பெண்களுக்கு எத்தகைய சுதந்திரத்தை அளிக் கிறது? மாற்று மதங்களை எப்படி அணுகுகிறது? போன்ற கேள்விகளை முன்வைத்து இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்தும் நூல்.
சாதியை அழித்தொழித்தல்
பி.ஆர்.அம்பேத்கர்
தமிழில்: பிரேமா ரேவதி
காலச்சுவடு பதிப்பகம் - 9677778863
விலை: ரூ. 295
அம்பேத்கர் எழுதிய ‘அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ எனும் புகழ்பெற்ற கட்டுரையின் தமிழ் வடிவம். இதற்கு அருந்ததி ராய் எழுதிய மிக நீண்ட முன்னுரையும் தமிழ்வடிவம் பெற்றிருக்கிறது. இவற்றுடன், நவயானா பதிப்பகத்தின் ஆசிரியர் ஆனந்த் வரலாற்றுத் தரவுகளுடன் எழுதிய குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.