Published : 07 May 2016 08:55 AM
Last Updated : 07 May 2016 08:55 AM

காப்பிராயன் கவிதை - டாஸ்மாக்கும் இலவசமும்

திடீர்னு
தேர்தல் அறிக்கைய
அம்மா விட்டாங்க
ஒண்ணேகாலு ஆயிரம் கோடி
திட்டம் சொல்றாங்க!

ரேஷன் கார்டுக்கு செல்போனு
ஸ்கூட்டருக்கு மானியம்
பொங்கலுக்கு ஐந்நூறு
டிரெஸ்ஸு வாங்க இலவசம்!

விவசாயி கடன் தள்ளுபடி
இலவசமா மின்சாரம்
முடியுமான்னு கேக்குறாங்க
எங்க சம்சாரம்!

டாஸ்மாக்கையும் படிப்படியா
மூடப் போறாங்க
இதுக்கெல்லாம் யாரைக் கடன்
கேக்கப் போறாங்க?

அம்மாவால காப்பிராயன்
தலைய சுத்துது
காப்பி வாங்கிக் குடுங்கப்பா
குடிச்சா நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x