Published : 17 May 2016 04:04 PM
Last Updated : 17 May 2016 04:04 PM

நெட்டிசன் நோட்ஸ்: சென்னைவாசிகளே ஃபேஸ்புக்லயே ஓட்டுப் போடுங்க!

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் தவிர 232 தொகுதிகளிலும் நேற்று (திங்கள் கிழமை) தேர்தல் நடைற்றது. தமிழகத்தில் மொத்தம் 73.76% வாக்குகள் பதிவாகின.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவும், நகர்ப்புறங்களில் குறைந்த அளவும் வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 60.47 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பகிர்ந்த கருத்துகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>Kirubakaran Srinivas:

#படிப்பறிவு vs #பகுத்தறிவு

#சென்னை vs #தருமபுரி

>Kalyanaraman:

படிப்பு, நாகரீகம்னு எல்லாத்துலயும் முதலாவது. என்ன பிரயோசனம்?

ஓட்டுப்பதிவு 57% தான். #சென்னைவாசிகள்

*

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நமக்கென்ன என ஓய்வு எடுத்து இருக்கிறார்கள். அவர்களை என்னவென்று திட்டுவது?

>மறுக்காலத்து கள்ளன்:

ஜனநாயக கடமைய நிறைவேற்றாத சென்னை வாசிகளே.. தமிழ்நாட்டுல என்ன வேலை...? பக்கத்து ஸ்டேட் ஆந்திராவில போயி இருக்கலாமே !!!

>Joe Selva:

சென்னை மக்கள் : எனக்கு தேர்தல் அன்னைக்கு நேர்ல போய் ஓட்டு போட மட்டும்தான் பயம். மத்தபடி எனக்கு சமுதாய அக்கறை அதிகம்.

*

ஓட்டு போடவே வரமாட்டோம். ஆனால் சமூக அக்கறை அதிகமாக இருக்குன்னு டிவீட் போடுவோம். #சென்னை மக்கள்.

>காட்டுப்பயல்:

மளிகையையே ஆன்லைனில் வாங்கும் சென்னை மக்களுக்கு, ஓட்டையும் ஆன்லைனில் போடச் சொன்னா வாக்கு சதவீதம் கூடலாம்.

>Selvam:

தர்மபுரி மாவட்டம் ஃபர்ஸ்ட், சென்னை லாஸ்ட். 'மாற்றம்' எங்க இருந்து 'யாருகிட்ட' இருந்து தொடங்கியிருக்குனு புரிஞ்சிருக்கும். முழு அறுவடை 2021 :)

>Balasundar:

சென்னை வெள்ளத்துல யாரும் வந்து பாக்கலனு சொன்ன சென்னை மக்கள்தான் மழைல போய் ஓட்டு போடல. #தவறுகள் நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்கின்றன.'

>e s vijayaraghavan:

நல்ல வேளை கொஞ்சம் படிக்காதவங்களும், ஏழை ஜனங்களும் இருந்ததால் தப்பித்தது சென்னை. இல்லைனா இன்னும் நிலைமை மோசமாகியிருக்கும்.

>புகழ்:

இதுவரை வாக்குச்சாவடிக்கு வராதவர்களின் வாக்கை நம்பித்தான் மநகூ களமிறங்குகிறது என்று பேசியவர்களைப் பார்த்துச் சிரிப்பாய்ச் சிரித்தது... சென்னை.

>Alien ஏலியன்:

சென்னை வாசிகள் வாய்ச்சொல் வீரர்கள். ஓட்டு போட வராத போது தெரிந்தது #TN100Percent

>அருண்:

திறப்பு விழாவுக்கு வர்ற நடிகைகளை வேடிக்கை பார்க்க, புது பட கட்-அவுட்டுக்கு பால் ஊத்ததான் சென்னை மக்கள். நீங்க ஃபேஸ்புக், ட்விட்டர்லயே ஓட்டு போடுங்க.

>mohamed fayaz:

ஏன்யா சென்னைவாசிகளா சன்மியூசிக்கு ஃபோன் பண்ணி பாட்டு கேக்க டைம் இருக்கு. ஓட்டு போட ரெண்டு நிமிஷம் இல்லயா.

>babunaraen:

ஓட்டு போடலைன்னாலும் சென்னை மக்களுக்கு எல்லாமே கிடைக்கும்...

இதனாலேயே அலட்சியம் அதிகம்.

>ஆல்தோட்டபூபதி:

சென்னைல ஓட்டு இருந்தும் ஓட்டு போடாதவங்கள, ஐபிஎல் முடிஞ்சவுடனே ஆன்ட்ரே ரஸ்ஸல் கையால ரெண்டு அப்பு விட சொல்லனும் ;-)

>Joe Selva:

சென்னை மக்கள்: வாத்தியாரே நம்ம தேர்தல்ல ஓட்டு போடலாமா?

வேணாம் திமிங்கலம், நம்ம சமூக வலைதளங்களில் கருத்து சொல்லலாம்..

>உங்களிள் ஒருவன் ‏@sabarivignesh2

பூத்தில் செல்ஃபி தடை செய்ய பட்டதால் வாக்கு செலுத்தவில்லை என்று கூறினார் அந்த சென்னை போராளி

>ரோசாபூ தையல்காரன்:

இனி வாக்களிப்பவருக்கு வருமான வரிச்சலுகை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சென்னை மக்கள் 100% வாக்களிப்பர்.

>Prasath Singh Dhoni:

அந்த 57 சதவீதமும் நடிகர் நடிகைகள பாக்க வந்தவங்களாதான் இருக்கும். #சென்னை

>Manikandan:

கிராமத்தில் இருக்கும் மணப்பெண் மற்றும் 105 வயது பாட்டிக்கு தெரிந்த கடமை, நன்கு படித்த சென்னை மக்களுக்கு தெரியவில்லை.

>Prasanna:

நியாயமான காரணம் இன்றி, தெரிந்தே ஓட்டுப் போடுவதைத் தவிர்த்திருந்தால், தயவு செய்து அந்த சென்னை மகான்களுக்கு, அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும் கேள்வி கேட்கும் தகுதி இல்லை என்பதை யாராவது உரக்கச் சொல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x