Published : 03 May 2016 11:00 AM
Last Updated : 03 May 2016 11:00 AM

காப்பிராயன் கவிதை - ஜோரு ஜோரு!

எலெக்‌ஷன் வந்தா கோடம்பாக்கம்
கலெக்‌ஷன் பண்ணுது
எந்தக் கட்சியில் சேரலாம்னு
செலெக்‌ஷன் பண்ணுது!

மச்சான் வா ஓட்டுப் போடன்னு
நமீதா வேற அழைக்கிறார்
அம்மாவோட கட்சியில
ஓடியாடி உழைக்கிறார்!

பவர் ஸ்டாரு பி.ஜே.பி-யில்
ஃபிரண்ட்ஷிப்பு ஆயிட்டார்
மேடையில சீனு போட்டு
டயலாக்கு பேசுவார்!

அண்ணாச்சி இமான் இப்ப
அறிவாலயம் தோஸ்த்துடா
பிரசாரம் ஷூட்டிங்குன்னு
லைஃபு ஆச்சு ஃபாஸ்ட்டுடா!

பாலிட்டிக்ஸு மூஞ்ச மட்டும்
பாத்து நமக்கு போருங்க
நடிகருங்க கலக்கும்போது
அரசியலு ஜோருங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x