

அந்தோனியோ கிராம்சி- தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்
தமிழில்: வான்முகிலன்
விலை: ரூ.600
அலைகள் பதிப்பகம் - 9444431344
இத்தாலியின் மார்க்ஸிய அறிஞர் அந்தோனியோ கிராம்சி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் எழுதிய குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல். கல்வி, அரசியல், தத்துவம், குடிமைச் சமூகம் போன்றவற்றைப் பற்றிய கிராம்சியின் விரிவான விவாதங்கள் அடங்கிய நூல் இது.
*******
அயோத்திதாசரின் சமூகச் சிந்தனைகளும் செயல்களும்
வெ.வெங்கடாசலம்
விலை: ரூ.120
புலம் பதிப்பகம் 9840603499
ஒடுக்கப்பட்டோர் வாழ்வியலை வரலாற்றுப் பின்புலத்துடன் மீட்டெடுத்த முதல் சிந்தனையாளர் அயோத்திதாசர். அவரது வரலாற்றையும் சிந்தனையையும் விரிவான தரவுகளோடும் காலப் பின்னணியுடனும் ஆராயும் நூல் இது. பல்வேறு தளங்களிலும் இயங்கிய அவரது சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியிருக்கிறது.
*******
நலம் காக்க வாங்க பழகலாம்..
மருத்துவர் கு.சிவராமன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,- 044 - 26251968
விலை: ரூ. 275
சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் பேசும் நூல். இன்றைய நவீன யுகத்தில் மக்களின் நலவாழ்வுக்குத் துணைபுரியும் அம்சங்கள் அடங்கியது சித்த மருத்துவம் என்று இந்நூல் பேசுகிறது. அறிவியலின் ஆய்வுக் கண்களுக்குப் புலப்படாத, ஆனால் முழுப் பயனளிக்கும் மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துகிறது.
*******