Published : 12 May 2016 09:51 AM
Last Updated : 12 May 2016 09:51 AM

காப்பிராயன் கவிதை - செம நடிப்பு

சினிமா
டிராமா நடிகருக்கு
இப்ப சீஸனு
தேர்தல் நேரம் வந்துபுட்டா
செம்ம கலெக் ஷனு!

விளம்பரத்தில் எல்லாக் கட்சியும்
பொளந்து கட்டுது - அத
நொடிக்கு நொடி சேனல் எல்லாம்
போட்டுக் காட்டுது!

ஒத்த பாட்டி ரெண்டு கட்சிய
ஒசத்திப் பேசுது - அந்த
விளம்பரத்த பாத்து ஜனங்க
மனசு கொழம்புது!

தங்கமுத்து போடும் ஸீனு
தாங்க முடியல - அவரு
அவுத்து விடுற டயலாக் கேட்டா
தூங்க முடியல!

தேர்தல் வந்தா உங்க நடிப்பு
செம ஜோருங்க - கொஞ்சம்
சினிமாவிலும் நல்லா நடிக்க
இனிமே பாருங்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x